புதன்கிழமை, நவம்பர் 13, 2024

அதிரடியாக களத்தில் இறங்கிய சந்தியா.. ஆலியாகே டஃப் கொடுப்பாங்க போல

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி 2 தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சமீபத்தில் இத்தொடரில் இருந்து ஆல்யா மானசா விலகினார். இவருக்கு பதிலாக சந்தியா கதாபாத்திரத்தில் புதிதாக ரியா என்ற நடிகை நடித்து வருகிறார்.

ரசிகர்கள் யார் வந்தாலும் ஆல்யா இடத்தை பிடிக்க முடியாது என கூறிவந்தனர். இந்நிலையில் சந்தியாவின் சிறுவயதிலிருந்தே போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவு தற்போது சரவணனுக்கும் தெரியவந்துள்ளது. இதனால் சந்தியாவை போலீஸ் வேலைக்கு படிக்கவைக்க அனுப்புகிறார்.

சந்தியாவும் இதற்கு சம்மதித்து படிப்பதற்காக இதுபோன்ற தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் கிளாஸ்க்கு செல்கிறார். ஆனால் அங்கு உள்ளவர்கள் முதலில் சந்தியா வந்தவுடன் இவர்தான் டீச்சர் என எல்லோரும் மரியாதை கொடுக்கிறார்கள். ஆனால் இவரும் படிக்க வந்துள்ளார் என்று தெரிந்த பின்பு எல்லோரும் கேலி செய்கிறார்கள்.

கல்யாணம் ஆன பிறகு உனக்கு எதுக்கு படிப்பு, வீட்டை பார்க்க வேண்டியதுதானே என பலரும் கிண்டல் செய்திருக்கின்றனர். இதற்கு எதுவுமே பேசாமல் சந்தியா அமைதியாக அமர்கிறார். இந்நிலையில் மறுநாள் மீண்டும் கிளாசுக்கு போன சந்தியா எல்லோருக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக பெண்களுக்கு எதிராக என்னென்ன சட்டங்கள் இருக்கிறது என்பதை பேசுகிறார்.

மேலும், சந்தியா நேற்று நான் பேசாமல் இருந்தது உங்களுடைய அறியாமையை பார்ப்பதற்கு தான் எனக் கூறுகிறாள். இது எல்லாவற்றையும் ஓரமாக நின்று கேட்டுக் கொண்டிருந்த பயிற்சியாளர் சந்தியாவை பாராட்டுகிறார். ஐபிஎஸ் ஆக வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணத்துடன் வருகிறார்கள்.

ஆனால் சமுதாயத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நினைப்போடு வருபவர்களில் ஒருவர் தான் சந்தியா என குறிப்பிடுகிறார். மேலும் சந்தியா ஒரு நல்ல மருமகள், ஸ்வீட் கடையில் கணவருக்கு உதவி செய்கிறார். மீதமுள்ள நேரத்தில் தான் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுக்காக உழைக்கிறார் என்று கூறியவுடன் அனைவரும் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள். தற்போது ரியாவின் நடிப்பை பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News