மாமியார் வீசிய வலையில் சிக்கிய ஐபிஎஸ் சந்தியா.. அதிரடி ட்விஸ்ட்டில் ராஜா ராணி 2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர்களில் ஒன்று தான் ராஜா ராணி 2. இதில் ஐபிஎஸ் தேர்வில் செலக்ட் ஆகி இருக்கும் சந்தியாவிற்கு அவரது மாமியார் சிவகாமி ஒரு டெஸ்ட் வைத்துள்ளார். அதாவது சந்தியா ஐபிஎஸ் ட்ரைனிங்காக வேறு ஊருக்கு செல்ல வேண்டும்.

இதற்கு சிவகாமி சம்மதம் தெரிவிக்க வேண்டுமென்றால் சரவணன் சமையலில் ஜெயித்து பெற்ற 5 லட்சம் பணத்தை யார் திருடியது என்பதை சந்தியா கண்டுபிடிக்க வேண்டும் என கூறியுள்ளார். உடனே சந்தியாவும் ஐபிஎஸ் மூளைக்கு வேலை கொடுத்து திருடனை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.

Also Read :சத்தியம் செய்து சபதம் எடுத்த தந்தை.. அசால்ட் காட்டும் சின்னத்திரை சிம்பு

ஆதி தான் அந்த பணத்தை திருடி ஜெனிக்கு நெக்லஸ் வாங்கி கொடுத்துள்ளார் என்பது சந்தியாவுக்கு தெரியவந்துள்ளது. இதைப் பற்றி ஆதி இடம் விசாரிக்கும் போது இந்த உண்மை மட்டும் அம்மாவுக்கு தெரிந்தால் கல்யாணத்தை நிறுத்தி விடுவார்கள் என சந்தியா காலில் விழுந்த கதறி அழுகிறார்.

இதனால் தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் சந்தியா குழப்பத்தில் உள்ளார். அதாவது திருடனை யார் என்று சொன்னால் மட்டுமே சிவகாமி ட்ரைனிங்க்கு சந்தியாவை அனுப்பி வைப்பார். மேலும் ஆதி தான் திருடன் என்று சொன்னால் அவனது திருமணம் கண்டிப்பாக தடைபடும்.

Also Read :டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் சன் டிவி.. விட்டுக்கொடுக்காமல் மல்லுக்கட்டும் விஜய் டிவி

ஆதி திருமணமா, ஐபிஎஸ் கனவா என்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சந்தியா உள்ளார். ஆனால் இது இரண்டையுமே நிறைவேற்றும்படி சந்தியா ஒரு திட்டம் தீட்ட உள்ளார். ஆதியாவை கண்டிப்பாக சிவகாமியிடம் சந்தியா காட்டிக் கொடுக்க மாட்டார்.

மேலும் இதற்காக ஒரு மாஸ்டர் பிளான் போட்டு சந்தியா எப்படியும் தனது ஐபிஎஸ் கனவை நிறைவேற்றுவார். மேலும் ஆதியின் திருமணம் நடப்பதற்குள் இத்தொடரில் பல்வேறு பிரச்சனைகள் அரங்கேற உள்ளது. இதனால் விறுவிறுப்பான கதைகளத்துடன் ராஜா ராணி 2 தொடர் வரவுள்ளது.

Also Read :நம்ம வச்சு கழுத்தை அறுத்துட்ட மீனா.. சொத்தை ஆட்டைய போட இப்படி ஒரு பிளானா?

Advertisement Amazon Prime Banner