ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

பால் செம்போடு பெட்ரூமுக்கு வந்த சந்தியா.. மூடு மாறிய சரவணன்!

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் தன்னுடைய மனைவி சந்தியா மட்டுமல்ல அவளுடைய பெற்றோரின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற பொறுப்பை கையில் எடுத்துக் கொண்ட சரவணனுக்கு தற்போது இக்கட்டான சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

ஏனென்றால் சரவணனின் அம்மா சிவகாமி, சந்தியாவிற்கு வீட்டுப் பொறுப்பு கொடுத்து நல்ல மருமகளாக மட்டும் இருந்தால்போதும் ஐபிஎஸ் கனவை மூட்டைகட்டி போட்டு விடு என கண்டிப்பாக சரவணன் இடமும் சந்தியாவிடம் சொல்லிவிட்டார்.

அதுமட்டுமின்றி சந்தியாவிடம் தனக்கும் ஒரு பேரப் பிள்ளையை பெற்று தர வேண்டும் என்று அடிக்கடி கூறுவதுடன் சந்தியா-சரவணன் இருவருக்கும் இன்று இரவு முதலிரவு ஏற்பாடு செய்திருக்கிறார்.

இதனால் சந்தியாவையும் புது பொண்ணு போல் அலங்கரிக்கப்பட்டு, பூக்களால் அவளுடைய பெட்ரூம் முழுவதும் சிவகாமி ஏற்பாடு செய்கிறாள். எனவே சந்தியாவும் மாமியாரின் பேச்சை தட்டாமல் அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு கையில் பால் செம்புடன் பெட்ரூமுக்கு செல்கிறாள்.

அங்கு காத்திருக்கும் சரவணனை ரொமான்டிக்காக சந்தியா பார்த்தவுடன், இப்படியெல்லாம் பார்த்தல் எனக்கு மூடு மாறி மாறிவிடும் என சந்தியாவிடம் சொல்லிவிட்டு தன்னுடைய ஆசையை சரவணன் அடக்கிக் கொள்கிறான்.

அதன் பிறகு பாலை வைத்துவிட்டு போய் புக்கை எடுத்து படியுங்கள் என ஸ்ட்ரிக்ட் ஆபிசர் போல் சந்தியாவை சரவணன் விரட்டுகிறான். இருப்பினும் ராஜா ராணி2 சீரியலில் ஐபிஎஸ் பரிட்சையில் தேர்ச்சி பெற்ற சந்தியா, ட்ரைனிங் போகும்பொழுது ஒரு குழந்தையை பெற்று சரவணனிடம் கொடுத்துவிட்டு தான் ட்ரெய்னிங் செல்வாள். அப்படித்தான் இந்தக்கதை இனிவரும் நாட்களில் ஒளிபரப்பப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News