Tamil Cinema News | சினிமா செய்திகள்
வித்தியாசமான மூன்று கெட்டப்புகளில் வெளியான சந்தானத்தின் டிக்கிலோனா போஸ்டர்.. அட சூப்பர் பா!
தமிழ் சினிமாவில் காமெடியில் இருந்து ஹீரோவாக மாறிய சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியானது.
சந்தானம் சறுக்கல்களை சந்தித்தாலும் சுதாரித்துக்கொண்டு ஹிட்டும் கொடுத்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த தில்லுக்கு துட்டு 2, A1 போன்ற படங்கள் வசூல் வேட்டையாடி உள்ளது.
தற்போது சந்தானம் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மூன்று விதமான கெட்டப்பில் நடிக்கின்ற படத்தின் டிக்கிலோனா(dikkilona) ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. ஜென்டில்மேன் படத்தில் கவுண்டமணி பேசும் வசனமான டிக்கிலோனா.
இந்நிலையில் சந்தானம் மூன்று வேடத்தில் நடிக்கும் டிக்கிலோனா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது மட்டுமில்லாமல் சந்தானம் இதுவரை பார்க்காத நோக்கில் இந்த படத்தில் இருப்பதால் இப்போதே எதிர்பார்ப்பு கிளம்பி விட்டன.

sandhanam-dikkilona
