Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

அர்ஜுன் ரெட்டி இயக்குனரின் அடுத்த படத்தில் ரன்பிர் கபூர்! வைரலாகுது உறைய வைக்கும் BGMயுடன் டீசர், டைட்டில்

தங்கள் முதல் படத்திலேயே உலக சினிமா அளவில் ரீச், ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். அப்படி பிரபலம் ஆன இயக்குனர் தான் சந்தீப் ரெட்டி வாங்கா. இவரின் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மொழி புரியாதவர்களை கூட பார்க்க வைத்தது, வசூல் வேட்டை நிகழ்த்திய படம்.

மகேஷ் பாபுவுக்கு தனது அடுத்த படத்தை ரெடி செய்ய ஆரம்பித்தார், அனால் அது ஒர்க் அவுட் ஆகவில்லை. அந்தநேரத்தில் தான் ‘அர்ஜுன் ரெட்டி’யின் ஹிந்தி ரீமேக்கான ‘கபீர் சிங்’ படத்தை ஷாகித் கபூரை வைத்து இயக்கினார். இந்த வெற்றி இவரது அடுத்த படத்தை பாலிவுட்டில் இயக்கம் வாய்ப்பை பெற்று தந்தது.

இவர் சொல்லிய காங்கஸ்டர் ட்ராமா ரன்பிர் கபூருக்கு பிடித்து போக, அவரும் ஓகே சொல்லிவிட்டார் சில பல மாதங்களுக்கு முன்பே. இப்படத்திற்கு முதலில் ‘டெவில்'(DEVIL)  என பெயரிடப்பட்டிருந்தது. எனினும் சல்மான் கான் நடிக்கும் கிக் படத்தின் பார்ட் 2 வுக்கு முடிவு செய்யப்பட்ட  தலைப்பு என்பதனால் இப்படத்திற்கு ‘அனிமல்’(ANIMAL)  என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 1ஆம் தேதி அன்று 12.01 மணிக்கு படக்குழுவினர் ஆடியோ டீசர் வெளியிட, அது வைரலாகி உள்ளது. இப்படத்தில் ரன்பீர் கபூருடன் அனில் கபூர், பாபி தியோல், பரினீதி சோப்ரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தீப் ரெட்டி வாங்காவின் அண்ணனின் பத்திரகாளி பிக்ச்சர்ஸ், சினி 1 ஸ்டுடியோஸ் மற்றும் பூஷன் குமார் டி சீரிஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

ஒரு நிமிட வீடியோவில் விசில் பேக் ட்ராப் பின்னணியில் ரன்பிர் கபூர் தன் அப்பாவுடன் பேசுகிறார். அதில் மீண்டும் பிறப்பது பற்றியும். மகனான தான் அப்பாவாக எப்படி அன்பு செலுத்துவேன் என சொல்கிறார்.. மீண்டும் அடுத்த பிறவி பற்றி பேசுகிறார்..  அந்த சமயத்தில் துப்பாக்கி தோட்டா சத்தத்துடன் முடிகிறது. ஹ்ரஸ்வர்தான் ராமேஸ்வர் இசை நம்மை உறையவைக்கிறது.

 

Continue Reading
To Top