நடிகர் விஷாலின் துப்பறிவாளன் திரைக்குவந்து ரசிகர்களுக்குகிடையே  நல்ல வரவேற்ப்பை பெற்றது அதேபோல் நல்ல வசூல் பெற்றது.விஷால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்துவைதுள்ளார் இப்பொழுது விஷால் நடிக்கவிருக்கும் படம் இதுதான்.

லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2005-ஆம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘சண்டக்கோழி’.விஷால் – மீரா ஜாஸ்மின் – ராஜ்கிரண் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாக இருக்கிறது. அதற்கான படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது.

thupparivaalan movie review

விஷாலின் 25-வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நடிகர் ராஜ்கிரன், சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வரலட்சுமி சரத்குமார் இப்படத்தில் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது.


விஷால் பிலிம் பாக்டரி சார்பில் விஷால் தயாரித்து வரும் இப்படத்திற்காக சென்னை பின்னி மில்லில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் ரூ.6 கோடி செலவில் மதுரை போன்ற பிரமாண்ட செட் அமைப்பட்டுள்ளது. அதில் கடைகள், கோவில் திருவிழா கொண்டாடும் வளாகம், பிரமாண்ட கட்டிடங்கள் போன்றவை உருவாக்கப்பட்டுன.