Tamil Cinema News | சினிமா செய்திகள்
சண்டைக்கோழி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது, இதில் விஷால், கீர்த்தி சுரேஷ், லிங்குசாமி, ராஜ்கிரண், ஒளிப்பதிவாளர் சக்தி, எடிட்டர் பிரவீன், பார்த்திபன் என பலர் கலந்து கொண்டார்கள், இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது விஷால் மனம் திறந்து பேசியுள்ளார்,

sandakozhi
அவர் பேசியதாவது” என்னுடன் 25 படங்களில் பணியாற்றிய அனைவருக்கும் முதலில் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன், சண்டக்கோழி படம் முதலில் எனக்கு எழுதப்பட்ட கதையே கிடையாது, சூர்யாவுக்கு எழுதப்பட்ட கதை , லிங்குசாமி எனக்கு இருபது வருடம் நண்பர் என்பதால் கதையை படித்த பொழுது எனக்கு பிடித்தால் நான் உரிமையுடன் இந்த படத்தில் நடிக்கிறேன் என கூறினேன்.
அந்த சமயத்தில் செல்லமே திரைப்படமும் வெளிவரவில்லை, சண்டக்கோழி படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக என்னை இறக்கினார்கள் அதில் தொடங்கியதுதான் எனது வாழ்க்கை. தமிழ் மற்றும் தெலுங்கில் வரும் அக்டோபர் 18ம் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் பேசியுள்ளார்.
