Connect with us

Reviews | விமர்சனங்கள்

திருவிழாக் கொண்டாட்டம் – விஷாலின் சண்டக்கோழி 2 திரை விமர்சனம்.

sandakozhi

கோலிவுட்டில் பார்ட் படங்கள் எடுப்பது தான் லேட்டஸ்ட் ட்ரெண்ட். அந்த லிஸ்டில் தான் இப்படமும் இணைந்தது. பல நாட்கள் டிஸ்கஷனில் இருந்து பின்னர் ஆரம்பிக்கப்பட்ட ப்ராஜெக்ட் இந்த சண்டக்கோழி 2. விஷாலுக்கு நல்ல மார்க்கெட் அமைய காரணமாக இருந்த படம், 13 வருடம் கழித்து மீண்டும் இயக்குனர் லிங்குசாமியுடன் கூட்டணி என எதிர்பார்ப்பின் உச்சம் இப்படம். பூஜை விடுமுறையை எதிர்பார்த்து ரிலீஸ் செய்துள்ள இந்த சண்டக்கோழி ஜெயித்ததா இல்லையா என பார்ப்போம் ..

கதை

துரை அய்யா (ராஜ்கிரண்) தலைமையில் அணைத்து ஊர் தலைவர்களும் கூட பஞ்சாயத்தில் ஆரம்பிக்கிறது படம். 7 வருடமாக தடைபட்டு நின்ற திருவிழாவை மீண்டும் நடத்துவதே நோக்கம். தன் கணவனை கொன்ற குடும்பத்தின் மொத்த வம்சத்தையும் அழிக்க துடிக்கும் வரலக்ஷ்மி மற்றும் அவரின் குடும்பம், எப்படியாவது மீதி இருக்கும் ஒருவனை இந்த திருவிழாவில் தீர்க்க திட்டம் போடுகின்றனர். ராஜ்கிரண் அடைக்கலம் கொடுக்கிறார்.

திருவிழாவிற்காக வெளிநாட்டில் இருந்து மீண்டும் சொந்த ஊர் திரும்புகிறார் பாலு (விஷால்). அங்கு செம்பருத்தியை (கீர்த்தி சுரேஷ்) சந்திக்க காதல் ஆரம்பம் ஆகிறது. ஒரு சண்டையில்  ராஜ்கிரண் மீது அரிவாள் வெட்டு விழ, விஷாலிடம் திருவிழா நின்று விட கூடாது என்று சத்தியம் வாங்கிவிட்டு கோமா நிலையில் சென்று விடுகிறார்.

இரண்டாம் பாதியில், அப்பா காயம் பட்டத்தை எப்படி சமாளிக்கிறார், திருவிழா நிற்காமல் விஷாலால் நடத்த முடிந்ததா,மீண்டும் ராஜ்கிரணுக்கு நினைவு திரும்பியதா, வரலட்சுமியின் பகையை சமாளித்தாரா என்று விறு விறுப்பான திரைக்கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர்.

பிளஸ்

ராஜ்கிரண் , விஷால் , யுவனின் பின்னணி இசை, ஒளிப்பதிவு

மைனஸ்

மக்கு ஹீரோயின், மெதுவான முதல் பாதி, சுமாரான பாடல்கள்

சினிமாபேட்டை அலசல்

கண்டிப்பாக ஹிட் கொடுக்க வேண்டும் என்ற நிலையில், திரைக்கதையை மட்டும் நம்பி களம் இறங்கியுள்ளார் இயக்குனர். வெறுமனே தலைப்பை மட்டும் வைக்காமல், முதல் படத்தின் தொடர்ச்சியாக, அதே கதாபாத்திரங்களை வைத்தது கூடுதல் பிளஸ். ராமதாஸ் காமெடி என்பதை தாண்டி குணச்சித்திர ரோலில் அசத்திவிட்டார். வரலக்ஷ்மயின் கதாபாத்திரத்துக்கு கொடுத்த பில்ட் அப்பில், எப்பொழுது தான் அவர் விஷாலுடன் நேரடியாக மோதுவார் என்ற எதிர்பார்ப்பை தூண்டியது படம்.

சினிமாபேட்டை வெர்டிக்ட்

திருவிழாவை மறந்துபோன மாடர்ன் மக்களுக்கு, கிராமத்தை கண் முன் காட்டுகின்றனர். எனினும் இன்று கத்தி, சண்டை செய்வதையே முழு நேர பணியாக வைத்துள்ளது போல சித்தரித்தது சற்றே சலிப்பை தட்டுகிறது. தன்னால் நடிக்கவும் முடியும் என்று கீர்த்தி இரண்டாம் பகுதியில் அசத்தி விட்டார்.

பல இடங்களில் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்காக பல காட்சிகளை புகுத்திய இந்த படக்குழு, தமிழ் ரசிகர்களுக்கு அது சலிப்பை தட்டுமே என்று ஏனோ தோன்றவில்லை.

ஆகமொத்தத்தில் இந்த தசரா விடுமுறைக்கு ஏற்றார் போல் கமெர்ஷியல் மசாலா தூவி நன்றாக கோழியை வறுத்து, விருந்து படைத்துவிட்டார் லிங்குசாமி.

சினிமாபேட்டை ரேட்டிங் 2.75/5.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top