Tamil Cinema News | சினிமா செய்திகள்
சண்டக்கோழி-2 திரையரங்கம் தொடர்பாக விஷால் எடுத்திருக்கும் விபரீத முடிவு.!
சமீபத்தில் வெளியாகிய தமிழ் திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று நல்ல வசூலை ஈட்டி வருகிறது அதுமட்டுமில்லாமல் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களையும் பெற்றது, அதேவேளையில் பைரசி இணையதளங்களும் தங்களது கடமையை கண்ணும் கருத்துமாக செய்து வருகிறது.

Sandakozhi-2
இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என விஷால் தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார், திருட்டுத்தனமாக பைரசி இணையதளங்களுக்கு வீடியோ எடுக்க உதவிய சில திரையரங்குகளுக்கு அதாவது மனுஷனா நீ, கோலி சோடா2 , ராஜா ரங்குஸ்கி, சீமராஜா, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை திருட்டுத்தனமாக வீடியோ எடுக்க உதவிய திரையரங்குகளுக்கு சண்டக்கோழி 2 திரைப்படம் திரையிடப்பட மாட்டாது படத்தை வெளியிடக்கூடாது என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
மேலும் சில தியேட்டர்கள் மீது போலீசார் விசாரணை நடந்து வரும் வேலையில் கியூப் நிறுவனம் தொழில்நுட்ப சேவையை அளித்து வருவதை நிறுத்த வேண்டும் இந்த வழக்கு முடியும் வரை இந்த திரையரங்குகளுக்கு புதிய ப்ரொஜெக்டர் அல்லது மாற்று புரொஜெக்டர் எதையும் தரக்கூடாது என வலியுறுத்தியுள்ளார் அப்படி தருவதால் தயாரிப்பாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதது போல் இருக்கும் என விஷால் அறிவித்துள்ளார்.
பைரசி புகாரில் சிக்கியுள்ளத் திரையரங்குகள்:
கிருஷ்ணகிரி முருகன் தியேட்டர், கிருஷ்ணகிரி நயன்தாரா, மயிலாடுதுறை கோமதி, கரூர் எல்லோரா, கரூர் கவிதாலயா, பெங்களூர் சத்யம், விருத்தாச்சலம் தியேட்டர், மங்களூர் சினி போலீஸ்,
