Connect with us
Cinemapettai

Cinemapettai

sanam-shetty-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முழு அரக்கியாக மாறி மொட்ட அங்கிளை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.. ஆக்ரோஷத்தின் உச்சகட்டத்தில் வெளியான ப்ரோமோ வீடியோ!

விஜய் டிவியின் பிரம்மாஸ்திரமான பிக் பாஸ் ஷோ வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் காடா.. நாடா.. என்ற டாஸ்க் நடந்து வருகிறது. இவ்வாறு இருக்க விஜய் டிவி இன்று வெளியிட்டுள்ள ப்ரோமோவில் சுரேஷ் சக்ரவர்த்தியை சனம் ஷெட்டி கேவலமாக வாடா, போடா என பேசியிருப்பது அனைவரையும்  திகைக்க வைத்துள்ளது.

அதாவது பிக்பாஸ் தொடங்கிய நாளில் இருந்தே அண்ணா அண்ணா என்று பூனைக்குட்டி போல் சுரேஷை சுற்றி வந்த  சனம், சுரேசை கண்டபடி பேசி இருக்கும் ப்ரோமோ வீடியோ சனத்தின் சுயரூபத்தை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

அந்த வகையில் இன்று வெளியான ப்ரோமோவில் ஆஜித்தை சூழ்ந்துகொண்ட அரக்கர்கள், ஆஜித் மீது ஸ்ப்ரே அடித்தபோது கோபத்தில் கத்துகிறார் சுரேஷ். இதனையடுத்து சுரேஷ் எதையோ வைத்து  சனத்தின் கையை தாக்கியபோது அது அவரது நெற்றியில் பட்டுவிட்டது.

மேலும் இதனால் கோபமான சனம், ‘கொஞ்சம் விட்டிருந்தான் என் கண்ணே போயிருக்கும்’ என பிக்பாஸ் வீடே அதிரும் அளவிற்கு கத்தியுள்ளார்.

இதனை அடுத்து மேலும் சனம் சுரேஷிடம், ‘ஏய் நீ வெளியே வாடா இப்போ’ என கத்தி கூறுகிறார். மேலும் சனம், ‘எனக்கு மனசு இருக்கு, எனக்கு மனசு இருக்கு’ என சினிமா டயலாக் கூற அதற்கு சுரேஷ் சக்ரவர்த்தி சிரிக்கிறார்.

இவ்வாறு சனம் ஷெட்டி கொஞ்சம் கூட சுரேஷ் சக்ரவர்த்தியின் வயதிற்கு மரியாதை தராமல் வாடா போடா என்று பேசியிருப்பது ஹவுஸ்மெட்ஸ் அனைவரையும் ஷாக் ஆக்கியுள்ளது.

மேலும் இன்றைக்கு எபிசோட் முழுவதும் சனம் செட்டி தான் ஃபுல் கண்டெண்ட் கொடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் ஆவலோடு காத்திருக்கின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.

Continue Reading
To Top