திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

உண்மை மனிதர் ஆரிக்கு சனம் செய்த செயல்.. அடங்காத காட்டுத்தீ போல் பரவும் புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4வது சீசன் சமீபத்தில்தான் நிறைவடைந்தது. இதில் டைட்டில் வின்னர் ஆரி வெற்றிபெற்றார். ஆரியின் வெற்றிக்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிக்பாஸில் கலந்து கொண்ட பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பகாலத்தில் நண்பர்கள்ளாக இருந்த பலரும் இடைப்பட்ட காலத்தில் சண்டை சச்சரவு என தங்களின் உண்மை குணத்தை வெளிப்படுத்தி வந்தனர். பாலா, சம்யுக்தா போன்ற போட்டியாளர்கள் ஆரியை வெகுவாக விமர்சித்து வந்தனர்.

பிக்பாஸில் சனம் ஷெட்டிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. சனம் ஷெட்டி வெளியேறியபோது கூட ஒரு கூட்டம் ஏன் சனம் ஷெட்டி வெளியேற்றினார்கள் என தங்களது ஆதங்கத்தையும், கோபத்தையும் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வந்தனர்.

அதுமட்டுமில்லாமல் உண்மையாக இருப்பவர்கள் யாரும் பிக்பாஸில் இருக்க மாட்டார்கள் எனவும் கடுமையாக பிக்பாஸ்யை விமர்சித்து வந்தனர்.

bigboos
bigboos

அதேபோல் சனம் ஷெட்டி, அனிதா சம்பத், ஆரி மூவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாகவே நண்பர்களாக இருந்தனர். ஏன் கடைசியாக ஆரி டைட்டில் வின்னர் ஆக அறிவிக்கப்பட்டது. அப்போதுகூட அனிதா மற்றும் சனம் ஷெட்டி ஆரியை வெகுவாக பாராட்டிவிட்டு, ஆரி வெற்றி பெற்றது நாங்களும் வெற்றி பெற்றது போல் உள்ளது என பெருமிதத்துடன் தங்களது நட்பை வெளிப்படுத்திக் காட்டினர்.

aari arjuna
aari arjuna

தற்போது சனம் ஷெட்டி அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஆரிக்கு சல்யூட் அடித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சனம் ஷெட்டியை பாராட்டியது மட்டுமின்றி நீங்கள் இருவரும் இணைந்து நடித்தால் நல்லா இருக்கும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு ஆரி தேங்க்யூ சனம் ஷெட்டி என பதிலுக்கு ரிப்ளை செய்துள்ளார்.

- Advertisement -spot_img

Trending News