Connect with us
Cinemapettai

Cinemapettai

tharshan-sanam-shetty

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரே வீடியோவில் ஒட்டுமொத்த தமிழ் மக்களை தட்டி தூக்கிய சனம் ஷெட்டி.. அப்ப தர்ஷன் தான் மிஸ் பண்ணிடாரா.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நான்கா சீசனில் அதிகம் பேசப்பட்ட ஒரு போட்டியாளர் என்றால் அது சனம் ஷெட்டி தான். இவர் முதலில் ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்தார். ஏனென்றால் ஓவர் ஆக்டிங் செய்வது போல் ரசிகர்கள் மனதில் தோன்றியது.

ஆனால் பிக்பாஸ் தொடங்கி 60 நாட்களுக்கு மேலாகியும் சனம் ஷெட்டி முதல் நாள் எப்படி இருந்தாரோ அதே போல் தான் பிக்பாஸ் வெளியேறுவதன் முன்னாடி நாள் வரைக்கும் மாறாமல் இருந்தார். அதன் பிறகுதான் ரசிகர்கள் அவருடைய உண்மை குணத்தை அறிந்தனர் .

பிக்பாஸ் வருவதற்கு முன்பதாகவே சனம் ஷெட்டி பல விளம்பரங்களில் நடித்துள்ளார். படங்களில் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்தார். ரசிகர்களிடம் பிரபலம் அடையாத ஒரே காரணத்தால் பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்று தற்போது அதிக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

பிக் பாஸ் போட்டியாளர்களிடம் அதிக வெறுப்பை சம்பாதித்த போட்டியாளர் என்றால் அது சனம் ஷெட்டி தான். பிக்பாஸில் இருந்து வெளியேறிய சனம் ஷெட்டிக்கு ஆதரவாக பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். உண்மையாக இருப்பவர்கள் பிக்பாஸில் இருக்க மாட்டார்கள் எனவும் ரசிகர்கள் குரல் கொடுத்து வந்தனர்.

ஆனால் சனம் ஷெட்டி எனக்காக ஆதரவு கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்றி என அவருடைய உண்மை குணத்தை மீண்டும் காட்டியுள்ளார்.

பிக் பாஸ் இன் முன்னாள் போட்டியாளரான தர்சனின் காதலி என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top