Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்திய அளவில் ட்ரெண்டிங்கான சனம் ஷெட்டி.. ரசிகர்கள் கூச்சலிட்டதால் பரபரப்பில் பிக் பாஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி, அனுதினமும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வருகிறது. மேலும் வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டிலிருந்து ஒருவர் வெளியேறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த வாரம் சனம் ஷெட்டி தான் வெளியே போகிறார் என்று இணையத்தில் கசிந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது சனம் செட்டி இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
அதாவது பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளில் உள்ள நியாயத்தை தைரியமாக உடனுக்குடன் கேட்பவர் தான் சனம் ஷெட்டி. இதனால் சனம் ஷெட்டிக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.
மேலும் தற்போது, சனம் ஷெட்டி தான் இந்த வாரம் வெளியேற போகிறார் என்ற தகவல் கிடைத்ததும் அவருடைய ரசிகர்கள், இந்திய அளவில் சனம் ஷெட்டியை ட்ரெண்டாக்கி வருகின்றனராம். அதில் ‘சனம் ஷெட்டியை வெளிய அனுப்ப வேண்டாம்’ என்றும் குறிப்பிட்டுள்ளனராம்.

sanam-shetty
எனவே, பிக்பாஸில் இருந்து சனம்ஷெட்டி வெளியேறுவதை விரும்பாத அவருடைய ரசிகர்கள் பலர், விஜய் டிவியின் இந்த முடிவிற்கு எதிராக இணையத்தில் கூச்சலிட்டு கொண்டிருக்கின்றனர்.

sanam-india-trending
