Connect with us
Cinemapettai

Cinemapettai

sanam-shetty

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆஜித்தின் ஃப்ரீ பாஸ் டிக்கெட்டுக்கு அப்படி ஒரு ஸ்கெட்ச் போட்ட சனம்.. காரித்துப்பும் ரசிகர்கள்!

மக்களால் ரசித்து பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்றாக விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன்4  நிகழ்ச்சியானது நாள்தோறும் சுவாரசியம் குறையாமல் ஒளிபரப்புகின்றனர்.

அதற்கேற்ப ஞாயிற்றுக்கிழமை அன்று கமல், பிக்பாஸ் கன்டஸ்டன்ட்ஸ்களுடன்  உரையாடிக் கொண்டிருக்கும்போது, போலி முகத்துடன் வீட்டில் சுற்றுபவர்களுக்கு மாஸ்கையும்,

இயல்பாக இருப்பவர்களுக்கு ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற பேட்ஜை குத்த வேண்டும் என்ற டாஸ்க் ஒன்று நடத்தப்பட்டது.

அந்த நேரத்தில் சனம் ஷெட்டி தந்திரத்துடன் ‘அகத்தின் அழகு முகத்தில்’ என்ற  பேட்ஜை ஆஜித்துக்கு குத்தினார்.

அதற்கு அவர் சொன்ன காரணம், “கையில் இருக்கும் ஃப்ரீ பாஸ்  டிக்கட்டை பிறருக்காகவும் பயன்படுத்தலாமா? என்ற நல்ல எண்ணத்துடன் ஆஜித் கேட்டது ரொம்ப பிடித்திருந்தது” என்று அஜித்துக்கு சோப்பு போட்டார் சனம்.

எனவே சனம் செட்டியின் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்னவென்றால் வீட்டை விட்டு வெளியேற போகும், போட்டியாளர்களில் கடைசியாக இருந்த இரண்டு நபர்கள் யார் என்றால் சனமும் ரேகாவும்,

அப்படி இருக்கும்போது அஜித், சனம் வெளியேறினால் அந்த டிக்கெட்டை ஆஜித் தனக்காக பயன்படுத்துவார் என்ற எதிர்பார்ப்புடன் ஆஜித்துக்கு அந்த பேட்ஜை சனம் குத்திய கேவலமான செயலை மக்கள் புரிந்து கொண்டனர்.

அதேபோல், சிறிது நேரத்திலே ரேகா தான் வீட்டை விட்டு வெளியேற போகும் நபர் என்பதை அறிந்ததும், தேவை இல்லாம ஒரு பேட்ஜை  வேஸ்ட் பண்ணிட்டனே என்று சனம் ஃபீல் பண்ணுது முகத்தில் நல்லாவே தெரிஞ்சது.

aajith-bigg-boss-4

aajith-bigg-boss-4

Continue Reading
To Top