Tamil Cinema News | சினிமா செய்திகள்
நான் சீனியர் மாடல் தான், சூப்பர் மாடல் இல்லை.. பிக்பாஸ் வீட்டிலிருந்தே மீராவுக்கு சரமாரியாக ஆப்பு வைத்த சம்யுக்தா!
பிக் பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 3 சீசகளைப்போல் இந்தச் சீசனையும் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
மேலும் தற்போது பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு தங்களது கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது நாம் அறிந்ததே.
அந்த வகையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ள மாடல் சம்யுக்தா, மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டில் நடத்திய லூட்டிகளுக்கு சரியான ஆப்பை அடித்துள்ளார்.
அதாவது தன்னுடைய கடந்த கால வாழ்க்கையைப் பற்றி பேசும்போது சம்யுக்தா, ‘நான் ஒரு மாடல். ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்துள்ளேன். ஆனால் ஒருபோதும் என்னை நான் சூப்பர் மாடல் என்று சொல்லிக் கொள்ள மாட்டேன்’ என்றார்.
மேலும் கடந்த சீசனில் மீராமிதுன் தன்னைத்தானே சூப்பர் மாடல் என்று கூறி பிக்பாஸ் வீட்டில் பெரிய அலப்பறை கொடுத்துக் கொண்டிருந்தது நமக்கு தெரிந்தது தான். இவ்வாறு இருக்க ஒரே லைன்ல நெத்தியடியாய் மீராமிதுனின் காலை வாரிவிட்டு இருக்காங்க நம்ம சம்யுக்தா.
மேலும் சம்யுக்தா அவரது திருமண வாழ்க்கை பற்றியும், அவருடைய குழந்தைக்கு ஏற்பட்ட பிரச்சனையும், அதனால் அவர் பட்ட வேதனையையும் எடுத்துரைத்தார்.
அதை அடுத்து பேசிய சம்யுக்தா, ஒரு அம்மாவுக்குத்தான் குழந்தையின் அசைவுகள் தெரியும் என்றும், ‘சேலை கட்டி இருந்தாலும், ஜீன்ஸ் போட்டாலும் பெண் பெண் தான்’ என்றும் கூறி தனது டாஸ்க்கை முடித்தார்.

meera mitun
