Tamil Cinema News | சினிமா செய்திகள்
சம்யுக்தாவிற்கு பதிலடி கொடுத்த சூப்பர் மாடல் மீரா மிதுன்.. அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு!
பிக்பாஸ் போட்டியாளரான சமுயுக்தா வீட்டினுள் இருந்து கொண்டே மீரா மிதுனை தாக்கி, நான் சூப்பர் மாடல் இல்ல சீனியர் மாடல் என்ற கிண்டலடித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக மீரா மிதுன் தனது பதிவை வெளியிட்டுள்ளார், அதாவது தாங்கள் கடந்து வந்த பாதைகள் என்ற டாஸ்கின் பேசுகையில் மீரா மனிதனை தாக்கி பேசியிருந்தார்.
ஏற்கனவே மீராமிதுன் முன்னணி நடிகர், நடிகைகளை அவமானப்படுத்தி பல பதிவுகளை வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் கொந்தளித்து போய் இருந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் இந்த பிரச்சனை தொடங்கியுள்ளது, சமுயுக்தா பேசுகையில் என்னை நான் சூப்பர் மாடல் என சொல்லிக் கொள்ள மாட்டேன் என்று கூறியவுடன் அனைத்து போட்டியாளர்களும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
இது ஒருபுறமிருக்க சமுயுக்தாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமூகவலைத்தளத்தில் மீரா மிதுன் பதிவிட்டுள்ளார், அதாவது தன்மேல் உள்ள பொறாமையால் தான் சமுயுக்தா இப்படி கூறியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் 2015 ஆம் ஆண்டில் சிறந்த புன்னகை என்ற விருதை வழங்கிய போது எடுத்த போட்டோ வையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

meera-smuktha-1
தன்னைப்போன்ற ஒரு வெற்றிகரமான சூப்பர் மாடலை பார்த்து பொறாமை படுவது வாடிக்கை தான் என பெருமைக்கு எதையோ தின்ன கதையாக கூறி உள்ளார் மீரா மிதுன்.

meera-twit
