பிக் பாஸில் கிமு வில் நடந்த பிரச்சனை ஓவியா ஜூலி சண்டை. ஆனால் அதை இன்னும் விடாமல் நெட்டிசன்கள் ஜூலியை காலி செய்து வருகின்றனர்.

ஒரே ஒரு பொய் சொல்லி கமல் காட்டிய குறும்படத்தால் அசிங்கப்பட்ட ஜூலி அதன் பிறகும் தனது நடிப்பை மெயின்டைன் செய்து வந்தார்.

julie

இதனால் பொது இடங்களில் பலரும் அவரை திட்டுவதும், கிண்டல் செய்வதும் வழக்கமாகிவிட்டது. அதைவிட நெட்டிசன்கள் தினமும் ஜூலியை கிண்டி கிழங்கெடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் ஆடிய ஜூலியை மேடையில் நிற்கவிடாமல் தொடர்ந்து ஓவியா ஆர்மியினர் கலாய்த்து அனுப்பினர், இதனால் கோபம் கொண்ட ஜூலி நீங்கள் கொண்டாடும் அளவிற்கு ஓவியாவிற்கு தகுதியில்லை என்று சொல்லியிருக்கிறார்.

juli biggboss

போதாதா பொங்கி எழுந்து விட்டனர் ஆர்மி படையினர். அவர்களை சாந்த படுத்த ஓவியா ஜூலியை ஒன்னும் செய்யாதிங்க என்று ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்த ஆர்மியினர் “பார்த்தாயா எங்கள் தலைவியின் நல்ல குணத்தை நீ தவறாக பேசி வரும்போதும் உன்னை ஒன்றும் செய்யக் கூடாது என்று சொல்கிறார்” என்று மீண்டும் சண்டைக்கு கிளம்பிவிட்டனர்.

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் கொண்டாட்டம் என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது அதன் ப்ரோமோ வீடியோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் பிக் பாஸ் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர், ஓவியா இருப்பது போல் தெரியவில்லை. ஜூலியை அவரது பெற்றோருடன் மேடைக்கு அழைத்து இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி “நிறைய விமர்சனங்கள் வந்துருக்கும், பார்துருப்பிங்க.

நம்ம ஜெயிக்கணும் அவ்வளவுதான், கொஞ்சம் இனிமே கொஞ்ச நாளைக்கு கொஞ்சம் பேசாமல் இருந்திங்கன்னா போதும்” என்று ஜூலிக்கு அறிவுரை வழங்குகிறார். அதை கேட்டவுடன் ஜூலியின் முகம் சுருங்கி போகிறது. ஜூலியின் அருகில் அவரது பெற்றோர்கள் வருத்தத்துடன் நிற்கிறார்கள். பின்னே சோக இசை கேட்கிறது.

இதோ அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு

இதை விட கொடுமை இன்னும் காயத்ரி தனது சவுண்டை குறைத்த பாடில்லை, அவரது ட்விட்டர் பதிவிற்கு எத்தனை பேர் எதிர்த்து திட்டினாலும் அவர் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறார்.

“ஓவியாவிற்கு தான் செய்தது குற்றம்தான் என்று உன் நண்பர் ட்ரிகர் சக்தி கூட ஒப்புக்கொண்டுவிட்டார். கணேஷ் வெங்கட் போன்ற ஜென்டில் நபர்கள் தங்களது தவறை ஒப்புக்கொண்டுவிட்டனர். ஆனால் நீயும் சுழியும் இன்னும் எடிட்டிங் அது இது என்று சாக்கு சொல்லி உங்கள் மீது எந்த தவறும் இல்லாதது போல் நடிக்கின்றீர்கள் உங்களுக்கெல்லாம் வெட்கமா இல்லையா?” என்றெல்லாம் நெட்டிசன்கள் தொடர்ந்து திட்டி தீர்த்து வருகின்றனர்.

ஆனால் இது எதையும் காயத்ரி கண்டுகொள்வதாய் தெரியவில்லை.

இதோ அவரது சமீப பதிவும் அதற்கான நெட்டிசங்களின் பதிலடிகளும்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: இதுக்கு ஒரு எண்டு கார்டே கிடையாதா!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here