Photos | புகைப்படங்கள்
சமுத்திரக்கனிக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா?. ட்ரெண்டாகும் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள்
சமுத்திரக்கனி மனைவி, மகன், மகள் என குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இயக்குனராக சினிமாவில் அறிமுகமான சமுத்திரக்கனி இப்போது நடிகராக மாஸ் காட்டி வருகிறார். இவர் பெரும்பாலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் தயாளன் என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார்.
இதைதொடர்ந்து சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் சமுத்திரக்கனி இயற்கை சார்ந்த விஷயங்களை மிகவும் விரும்பக் கூடியவர். விவசாயத்தின் மகத்துவத்தை பற்றி தன்னுடைய படங்களில் அதிகம் பேசி உள்ளார்.

samuthirakani-pongal-celebration
இந்நிலையில் இன்று சமுத்திரக்கனி தன்னுடைய குடும்பத்துடன் இந்த பொங்கலை கொண்டாடி உள்ளார். மனைவி, மகன், மகள் என குடும்பத்துடன் சமுத்திரக்கனி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் சமுத்திரகனிக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா என ஆச்சரியப்பட்டுள்ளனர்.
Also Read : அடையாளம் காட்டியதை அடியோடு மறந்து சமுத்திரக்கனி.. ஆல் ரவுண்டராக மாறியாதால் காத்திருக்கும் தயாரிப்பாளர்கள்

samuthirakani-wife

samuthirakani-son-daughter
அதுமட்டுமின்றி சமுத்திரகனி குடும்பத்தில் அடுத்த ஹீரோ உருவாகி வருகிறார் என பலரும் கூறி வருகிறார்கள். ஏனென்றால் அவரது மகன் இப்போதே ஹீரோ போல் உள்ளதால் பட வாய்ப்புகள் அவருக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

samuthirakani-family-photo
Also Read : சமுத்திரக்கனி மிரட்டிய 5 நெகடிவ் கதாபாத்திரங்கள்.. வில்லன்களுக்கு டப் கொடுத்த அப்பால நாயுடு
