சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் இவ்வளவு சாதிக்க முடியுமா என பலருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்நிலையில் தற்போது டான் மற்றும் அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து உள்ளார்.
இதில் டான் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் பிரியங்கா அருள்மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். டான் படம் மே 13ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் தமிழ்நாட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.
இப்படத்தில் பள்ளிப் பருவத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், சமுத்திரக்கனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய சமுத்ரகனி, தம்பி சிவகார்த்திகேயன் நம் தேச மட்டுமல்லாது, இந்திய தேசத்திலே தவிர்க்க முடியாத நடிகராக வந்து நிற்பார். மேலும் இன்னும் உயரமான இடத்திற்கு போவார் என நம்புகிறேன், அதற்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என சிவகார்த்திகேயனை பற்றி நெகிழ்ச்சியாக சமுத்திரகனி பேசியுள்ளார். அதைப்போல் தற்போது எஸ் ஜே சூர்யாவும், சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசியுள்ளார். இது சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கு நிச்சயமாக பொறாமையை தான் ஏற்படுத்தி இருக்கும்.
மேடையின் கீழே அமர்ந்து இருந்த உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல பிரபலங்கள் இதைக் கேட்ட அசந்துபோய் பார்த்தனர். மேலும் இப்படத்தில் சமுத்திரக்கனி ஒரு அரை மணி நேரம் மட்டும் தான் வருவாராம். அந்த காட்சிகள் நடிப்பதற்காக பல டேக்குகள் வாங்கி தான் நடித்ததாகவும் கூறியுள்ளார்.
ஏனென்றால் சமுத்திரகனியின் கதாபாத்திரம் அப்படி ஒரு கனமான கதாபாத்திரம் ஆக உள்ளதால் பல டேக்குகள் போனதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் டாக்டர் படம் நல்ல வசூலை ஈட்டிய நிலையில் டான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் அதை பூர்த்தி செய்கிறார் என்பது இன்னும் சில நாட்களிலேயே தெரியவரும்.