இயக்குனர் வெற்றிமாறனிடம் இணை  இயக்குனராக இருந்தவர் மணிமாறன். இவர் சித்தார்த்தின் ‘உதயம் NH  4’, மற்றும் ஜெய்யின் ‘புகழ்; படத்தை இயக்கியுள்ளார். மேலும் பொறியாளன் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியதும் இவரே.

Manimaaran

சங்கத்தலைவன்

வெற்றிமாறன் அவர்கள் தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிக்கும் ‘சங்கத்தலைவன்’ படத்தை இயக்க உள்ளார்.

#Thariyudan #sangathalaivan

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் டிவி தொகுப்பாளினி  ரம்யா நாயகியாக நடிக்கவுள்ளார்.

அதிகம் படித்தவை:  இயக்குனர்களை காக்க வைகிறார பிரபல ஹீரோயின்?
Ramya Subramanian

சேலம், கோவை, ஈரோடு மாவட்டங்களிள் விசைத்தறித்தொழில் மிகவும் பிரபலம். தங்களின் வீட்டிலேயே தறி வைத்திருப்பவர் மிக அதிகம். அவர்களின் ப்ரிச்சனைகளை விவரிக்கும் நாவல்  ‘தறியுடன்’ . இதனை இரா. பாரதிநாதன் என்பவர் எழுதியுள்ளார்.

Jallikattu-protesters-samuthirakani-request-again-protest
Samuthirakani

தறியுடன்

மாக்சிய லெனிய மாவோ சிந்தனைகளை வழிகாட்டும் தத்துவமாய் ஏற்று நக்சலைட் இயக்கத்தில் அர்ப்பணிப்புடன் களப்பணி செய்தவர் தானாம் இந்த பாரதிநாதன். அவர்  அந்த போராட்ட அனுபவங்களையே இந்த நாவலில்  எழுதியுள்ளார் என்கின்றனர். அவரது படைப்பு ஒரு பாட்டாளி வர்க்க புரட்சிகர கலை இலக்கிய படைப்பு  என்கின்றனர் அந்த நாவலை படித்தவர்கள். இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு தான் சங்கத்தலைவன் படத்தின்  திரைக்கதையை அமைத்துள்ளாராம் இயக்குனர்.

அதிகம் படித்தவை:  விஜயதசமி வாழ்த்துக்களுடன் "பேட்ட" பட முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரஜினி.
thariyudan

இப்படத்தின்  ஷூட்டிங் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது.