சமுத்திரக்கனியின் ‘தொண்டன்’ படமும் ‘கொளஞ்சி’ படமும் மே 5ம் தேதி ஒரே நாளில் வெளியாகிறது.

சமூக அக்கறையுள்ள படங்களை கொடுத்து வரும் சமுத்திரக்கனி ‘அப்பா’ படத்திற்கு பின்னர் தயாரித்து, இயக்கி நடித்து வந்த படம் ‘தொண்டன்’. இந்த படம் வரும் மே 5ஆம் தேதி வெளியாகிறது.

அதே நேரத்தில் சமுத்திரக்கனி, சங்கவி நடிப்பில் தனராம் சரவணன் இயக்கிய ‘கொளஞ்சி’ திரைப்படமும் அதே மே 5ஆம் தேதி ரிலீஸ் செய்ய அந்த படத்தின் தயாரிப்பாளர் நவீன் திட்டமிட்டுள்ளாராம். எனவே மே 5ஆம் தேதி சமுத்திரக்கனியின் இரண்டு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.