அரசியல் சாயத்தால் சமுத்திரக்கனிக்கு வந்த அவப்பெயர்.. கை கட்டி நின்றதால் வரும் எதிர்ப்பு

Actor Samuthirakani: இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி வாகை சூடும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஒரு சில கணிப்புகளும் யூகங்களும் வந்தாலும் தேர்தல் முடிவு வரை காத்திருக்க தான் வேண்டும்.

இது ஒரு பக்கம் இருக்க திரை பிரபலங்கள் தங்களுக்கு பிடித்த வேட்பாளர்களுக்காக ஓட்டு கேட்டு வருகின்றனர். சிலர் சோசியல் மீடியாவை அதற்காக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

சிலர் வெளிப்படையாகவே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படித்தான் சமுத்திரக்கனி கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ளார்.

அவப்பெயர் வாங்கிய சமுத்திரக்கனி

அதுதான் இப்போது அவருக்கு வினையாக முடிந்துள்ளது. அதாவது கம்யூனிஸ்ட் திமுக அனைவரும் கூட்டணியாக தான் போட்டியிடுகின்றனர்.

அதை வைத்து பார்க்கும் போது சமுத்திரகனி திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறாரா? என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அது மட்டுமின்றி அவர் காஞ்சி சங்கர மடத்தில் கைகட்டி நின்ற போட்டோ மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

ஒரு புரட்சி போராளியாக குரல் கொடுக்கும் இவர் நல்ல மனிதர் தான். ஆனால் இப்போது இந்த அரசியல் சாயத்தால் அவருடைய பெயர் டேமேஜ் ஆகி இருக்கிறது.

இதைப் பார்த்த பலரும் அவரை கண்டபடி திட்டி தீர்க்கின்றனர். உங்களுடைய உண்மை முகம் வெளிவந்துவிட்டது என அவருக்கு எதிரான கருத்துகளும் இப்போது கிளம்பியுள்ளது.

- Advertisement -