Tamil Cinema News | சினிமா செய்திகள்
வட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் !
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை படங்களின் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் படம் “வட சென்னை”.கேங்க்ஸ்டர் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தை 3 பாகமாக எடுக்க இருக்கிறார்கள் . இப்படத்தை தனுஷ் தன் வண்டர் பார் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு . வெங்கடேஷ் எடிட்டிங்.

Vada Chennai
தனுசுடன் இப்படத்தில் டேனியல் பாலாஜி, கிஷோர், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர்,சுப்ரமண்யம் சிவா, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
வட சென்னை – பார்ட் 1
முதல் பகுதி 1980களில் நடப்பது போன்ற கதைக்களமாம். இந்த பார்ட்டில் ஆண்ட்ரியாவின் கதாபாத்திர பெயர் சந்திரா என்று நேற்று வெளியிட்டார் தனுஷ். அதே போல இன்று சமுத்திரக்கனியின் லுக் மற்றும் பெயருடன் உள்ள போஸ்டரை வெளியிட்டுள்ளார் தனுஷ்.

Vada Chennai 00 samuthrakani
மேலும் “ரத்தத்தை பார்த்தவனின் வெறி அடங்காது ” என்று கதாபாத்திரத்தின் குரூரத்தை விளக்கியுள்ளார் தனுஷ்.
