சாம்சுங் நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Galaxy J7 Max இனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் இக் கைப்பேசியின் சிறப்பம்சங்கள் தொடர்பான சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி 5.6 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய HD தொடுதிரையினை இக் கைப்பேசி கொண்டுள்ளது.

அத்துடன் பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

தவிர தலா 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதன் Processor ஆனது 1.6GHz வேகத்தில் செயற்படக்கூடிய Octa Core MediaTek MT6757V வகையைச் சார்ந்தது.

இதன் விலையானது 250 டொலர்களுக்கும் 300 டொலர்களுக்கும் இடையில் இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.