Tamil Cinema News | சினிமா செய்திகள்
சாமி ஸ்கொயர் படத்தின் அதிர வைக்கும் மாஸ் தகவல்
சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் சாமி ஸ்கொயர் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பாகமாக வெளியாகும் படங்கள் பெரிதாக சோபிக்கவில்லை. இது வளரும் நாயகர்கள் தொடர்ந்து முன்னணி நாயகர்கள் வரை ஒன்றாக தான் இருந்தது. ஆனால், இயக்குனர் ஹரி இந்த லாஜிக்கை உடைத்தார். சூர்யாவின் நடிப்பில் வெளியான சிங்கம் படத்தினை அடுத்தடுத்த பாகங்களாக இயக்கினார். முதல் பாகத்தில் தொடர்ந்த முக்கிய கதாபாத்திரங்களை இதுவரை வெளிவந்துள்ள 3 பாகங்களிலும் நடிக்க வைத்து இருந்தார். வித்தியாசமான கதை களத்தில் மூன்று படங்களுமே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
இந்த வெற்றியின் தூண்டுக்கோலால், தன் இயக்கத்தில் வெளியான சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க ஹரி திட்டமிட்டு பணிகளை தொடங்கினார். போலீஸ் கதாபாத்திரத்துக்கு என்று ஒரு ட்ரேட் மார்க் காட்சிகள் எல்லாம் இப்படத்தின் மூலம் ஏற்கனவே உடைக்கப்பட்டு விட்டது. இதனால், 2003ம் ஆண்டு வெளியாகிய போதே சாமி படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. 15 வருடத்திற்கு பிறகு தயாராகும் இப்படத்தில் விக்ரம் அப்பா, மகன் என இரு வேடத்தில் நடிக்கிறார். மகன் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அப்போ, அப்பா ஜோடி த்ரிஷா? சரிதானே! தனக்கு இப்படத்தில் முக்கியத்துவமே இல்லை. தன்னால் நடிக்க முடியாது என த்ரிஷா படத்தில் இருந்து விலகி விட்டார். ஆனால், ஒரு கதாபாத்திரத்தை பாலோ செய்யும் ஹரி அவரிடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். ஏன்? தயாரிப்பாளர் சங்கம் வரை பிரச்சனை போனது. இறுதியில் த்ரிஷா நடிக்கிறார் என இயக்குனர் ஹரி சொல்லி இருக்கிறார்.
இரண்டாம் பாகத்திற்கு சாமி ஸ்கொயர் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமீன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். முதல் பாகத்தில் வில்லனாக நடித்த கோட்டா சீனிவாசராவ்வின் மகனாக பாபி சிம்ஹா நடிக்கிறார். இந்த பாகத்தின் வில்லன் அவர் தான். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரல் ஹிட் அடித்தது. அந்த வீடியோவின் இறுதியில், ட்ரைலர் மே 26ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, தூத்துக்குடி கலவர சம்பவத்தில், மக்கள் உயிரிழந்த நிலையில், ட்ரைலர் வெளியீடும் முடிவை படக்குழு ரத்து செய்தது.
இந்நிலையில், சாமி ஸ்கொயர் படத்தின் ட்ரைலர் (நாளை) மே 3ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
