2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன படம் சாமி. பீர் இட்லி, நான் போலீஸ் இல்லடா…பொறுக்கி’’, மிளகாப்பொடி போன்றவை அப்போதைய ட்ரெண்டிங் விஷயங்கள். மீண்டும் இயக்குனர் ஹரி, விக்ரம் கூட்டணியில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.

saamy2

‘தமீன்ஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் சிபு தமீன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசை. ஏ.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் விக்ரமுடன் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், பிரபு, சூரி, பாபி சிம்ஹா, சுந்தர், ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.

சாமி 2 படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லீக்காகி, வைரலாக பரவி வருகின்றது. இதிலிருந்து நம் நெட்டிசன்கள் படத்தின் கதை இது தான் என்று உத்தேசமாக கூறுகின்றனர்.

காரைக்குடி அருகில் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது . பெருமாள்பிச்சை கதாபாத்திரத்தில் நடித்த கோட்டா சீனிவாசராவின் வெண்கல சிலையை திறக்கும் காட்சியும், அதன் அருகில் அவருடைய நினைவு நாள் பொதுக்கூட்டம் நடத்துவது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டன. அதில் எடுத்த சில போட்டோக்கள் இதோ ..


சாமி 2 , முதல் பாகத்தின் தொடர்ச்சி தான், மேலும் 29 வருடங்களுக்கு பின்னர் நடை பெரும் சம்பவங்கள் தான் இதில் இடம் பெற்றுள்ளது என்கின்றனர்.

ஆறுச்சாமியாக த்ரிஷாவுடன் ஜோடி சேரும் சீனியர் விக்ரம். அவர் மகன் ஆ.ராம்சாமியாக கீர்த்தி சுரேஷுடன் ஜோடி சேரும் ஜூனியர் என் இரட்டை வேடங்களில் விக்ரம் நடித்துள்ளார். ஜூனியர் சாமி காதாபாத்திரத்துக்காக தான் மனிதர் மிக ஸ்லிம் ஆகியுள்ளாராம்.

ஷூட்டிங் ஸ்பாட்டு பாணரில் “தியாகி.பெருமாள் பிச்சை அவர்களின் 29-ஆம் ஆண்டு நினைவுநாள் விழா என்று குறிப்பிட்டு, கீழே அவரின் மகன்களான மகேந்திரபிச்சை (சுந்தர்), ராவணபிச்சை (பாபி சிம்ஹா), தேவேந்திரபிச்சை (ஜான் விஜய்) ஆகிய மூவரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது.

எனவே வில்லன் பெருமாள் பிச்சையின் மகன்களுடன் மோதப்போவது நம்ப ஜூனியர் விக்ரம் தான் என்று சொல்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள் . மூன்று வில்லன்கள், இரண்டு விக்ரம் என்பதால் தான் இப்படத்திற்கு “சாமி ஸ்கொயர்” என்று ஹரி பெயர் வைத்துள்ளார்.