Connect with us
Cinemapettai

Cinemapettai

suirya-vijay-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி 65, சூர்யா 40 படங்களில் ஒப்பந்தமான பிரபல நடிகை.. விஜய், சூர்யாவுக்கு இவர் செட் ஆவாரா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் சூர்யா ஆகிய இருவரின் படங்களும் தயாராக உள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனம் என்றால் அது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான்.

மற்ற தயாரிப்பாளர்கள் பெரிய பட்ஜெட்டில் படமெடுக்க யோசிக்கும்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் துணிந்து ரிஸ்க் எடுத்து வருகிறது. அந்த வகையில் தளபதி 65 மற்றும் சூர்யா 40 போன்ற படங்கள் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

thalapathy65-cinemapettai

thalapathy65-cinemapettai

தளபதி 65 படத்தை நெல்சனும், சூர்யா 40 படத்தை பாண்டிராஜும் இயக்க உள்ளனர். இந்த இரண்டு படங்களும் விஜய் மற்றும் சூர்யா ஆகியோரின் பிறந்தநாளை குறிவைத்து உருவாக உள்ளதாம். இந்நிலையில் இந்த இரண்டு படங்களிலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரபல நடிகை ரஷ்மிகா மந்தனா அவரை ஒப்பந்தம் செய்ய உள்ளார்களாம்.

suriya40-cinemapettai

suriya40-cinemapettai

தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகை ரஷ்மிகா மந்தனா. சமீபகாலமாக தெலுங்கில் ரஷ்மிகா மந்தனா நடிக்கும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில் தளபதி 65 மற்றும் சூர்யா 40 போன்ற படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படும்போது ரஷ்மிகா இருந்தால் இன்னமும் வரவேற்பு பெரிதாக இருக்கும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளார்களாம்.

ஒரு காலத்தில் அனுஷ்கா மற்றும் நயன்தாரா போன்ற நடிகைகள் தான் ஒரே நேரத்தில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார்கள். தற்போது அந்த அதிர்ஷ்டம் ராஷ்மிகா மந்தனாவுக்கு கிடைத்துள்ளது.

இந்த இரண்டு படங்களும் வெளியான பிறகு ரஷ்மிகாவுக்கு கண்டிப்பாக தமிழகத்தில் பெரிய அளவில் ரசிகர் பட்டாளமும் உருவாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Continue Reading
To Top