fbpx
Connect with us

Cinemapettai

ஒரே நாளில் மோதும் பிகில் – கைதி.. ரிலீஸ் தேதி அறிவிப்பு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரே நாளில் மோதும் பிகில் – கைதி.. ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் நடிக்கும் பிகில், கார்த்தி நடிக்கும் கைதி ஆகிய படங்கள் வரும் அக்டோபர் 25ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ், ராஜ்குமார்,தேவதர்ஷினி, யோகிபாபு, சௌந்தர்ராஜா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பிகில்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து உருவாகி உள்ள் இப்படத்தை ஏஜிஎஸ் எண்ட்ர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். மொத்தம் 179 நிமிடங்கள் உள்ள இப்படம் வரும் அக்டோபர் 25ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கார்த்தி நடித்துள்ள கைதி திரைப்படமும் அக்டோபர் 25ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கைதி படத்தில் கார்த்தி அஞ்சாதே நரேன், விஜய் டிவி தீனா, மரியம் ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். இருட்டிலேயே நடக்கும் கதை களம் என்று சொல்கிறார்கள். பிகில் மற்றும் கைதி ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் மோதிக்கொள்வதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

bigil

bigil

kaithi

kaithi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top