
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களை விட ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்கிறது. அதில் விதிவிலக்காக ஒரு மருத்துவ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கிரிஜாவுக்கு ரசிகர்களால் ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பியது.
அதாவது சின்னத்திரையின் சில தொலைக்காட்சிகளில் இரவு 10 மணிக்கு மேல் அந்தரங்கம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கிரிஜா.
சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர் இந்த நிகழ்ச்சியின் ஆடிஷனில் கலந்துகொண்டு தொகுப்பாளராக மாறினார். இந்த சமையல் மந்திரம் நிகழ்ச்சியில் வரும் டாக்டரிடம் இளைஞர்கள், திருமணமான ஆண்கள் என்று பலரும் தங்கள் அந்தரங்க பிரச்சனைகளை பற்றி கேட்பார்கள்.
இது தொடர்பான விளக்கங்களை கிரிஜா, டாக்டரிடம் தயக்கமில்லாமல் பேசுவார். ஒரு பெண் பொதுவெளியில் இப்படியெல்லாம் பேசலாமா என்று பலரும் கிரிஜாவுக்கு எதிரான பல விமர்சனங்களை வைத்தனர். ஆனால் அவர் இந்த பிரச்சனைகளை தைரியமாக எதிர் கொண்டார்.

தன்னை எதிர்த்த ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு மருத்துவம் தொடர்பான நிகழ்ச்சி என்பதை மனதில் வைத்து தான் நான் தொகுத்து வழங்கினேன். அதில் நடக்கும் உரையாடலை வைத்து என்னை விமர்சிக்க வேண்டாம் என்று தன்னை பற்றி வரும் நெகட்டிவ் கமெண்ட்டுகளுக்கு பதிலடி கொடுத்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் கிரிஜாவுக்கு சினிமா வாய்ப்புகளும் வந்தது. ஆனால் அந்த வாய்ப்புகள் அனைத்தும் கவர்ச்சியான கதாபாத்திரங்களாக இருந்ததால் கிரிஜா அதற்கு மறுத்துவிட்டார். தற்போது எந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்காத அவர் மும்பைக்கு சென்று தன் படிப்பை முடித்துள்ளார்.
இதனிடையே கிரிஜா தன் நீண்டகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் தன் கணவருடன் இருக்கும் ரொமான்டிக் போட்டோவை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் அவரை கிண்டல் செய்து கலாய்த்து வருகின்றனர்.
