வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பாண்டியனின் கடையை ஆட்டைய போட ஐடியா கொடுக்கும் சம்மந்தி.. மாமனாரை திருத்திய மீனா

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி நைசாக பேசி டியூஷன் எடுப்பதற்கு பாண்டியனிடமிருந்து சம்மதத்தை வாங்கி விட்டார். அந்த வகையில் ராஜியின் துணிச்சலான பேச்சுப் பற்றி தான் வீடு முழுவதும் போய்க்கொண்டிருக்கிறது. அதனால் செந்திலும், மீனாவிடம் ராஜியை பற்றி பாராட்டி பேசுகிறார்.

அப்பொழுது மீனா, செந்திலிடம் எக்ஸாமுக்கு படிச்சாச்சா என்று கேட்கிறார். எல்லாத்தையும் தரவாக படித்து முடித்து விட்டேன். இன்னும் எக்ஸாம் எழுதி ரிசல்ட் வந்தால் தான் தெரியும் என்று சொல்கிறார். உடனே மீனா இது பற்றி மாமனாரிடம் சொல்ல வேண்டும் என்று சொல்கிறார். அதற்கு ரிசல்ட் வந்த அப்புறம் அப்பாவிடம் சொல்லலாம் என்று சொல்கிறார்.

அடுத்ததாக அப்பா தற்போது எல்லாருடைய விஷயங்களிலும் யோசித்து முடிவு எடுப்பது நீ வந்த பிறகுதான். இந்த வீட்டில் மருமகளாக வந்த பிறகுதான் எல்லா விஷயங்களும் மாறிக்கொண்டே வருகிறது. நீ வந்து தான் என் அப்பாவை மாற்றி இருக்கிறாய் என்று பெருமையாக பேசுகிறார். அடுத்ததாக தங்கமயில், மாமனார் சொன்னதை நினைத்து புலம்புகிறார்.

நான் எங்கே வேலைக்கு எப்படி போவது என்று தெரியவில்லையே என்று பயத்திலேயே புலம்புகிறார். உடனே தங்கமயில் அம்மாவுக்கு போன் பண்ணி பாண்டியன் சொன்ன விஷயத்தை சொல்கிறார். இதை கேட்டதும் தங்கமயில் அம்மா, உன் மாமனார் கடை என்ன நஷ்டத்தில் போய்க்கொண்டிருக்கிறதா? வீட்டுக்கு வாழ வந்த பொண்ணுங்கள வேலைக்கு போக சொல்கிறார் என்று கேட்கிறார்.

அதற்கு தங்கமயில் நீ ஏன் படிச்சு முடிச்சு சும்மா இருக்கணும், உன் படிப்புக்கு ஏற்ற வேலையை தேடி பாரு என்று சொன்னதாக அம்மாவிடம் சொல்கிறார். இதை கேட்டதும் தங்கமயிலின் அம்மா கொடுக்கும் ஐடியா என்னவென்றால் உன் மாமனார் கடையில் கல்லாப்பெட்டியில் உட்கார வேலையை பாரு. அப்படியே அங்கு இருந்து கொண்டு உன் மாமனாரை கவுத்து அந்த கடையை ஆட்டை போடு என்று ஐடியா கொடுக்கிறார்.

பிறகு தங்கமயிலிடம் பேச சரவணன் ரூமுக்கு வந்து விடுகிறார். வந்த சரவணன் அப்பா சொன்னபடி நீயும் வேலைக்கு போ அதுதான் எனக்கும் சந்தோஷம் என்று சொல்கிறார். ஆனால் தங்கமயில் எனக்கு வீட்டில் உள்ள வேலையை பார்த்து உங்களுக்கு தினமும் சாப்பாடு கொண்டு வந்து கொடுப்பது தான் சந்தோசம்.

அதுதானே உங்களுக்கும் பிடிக்கும் என்று சொல்கிறார், அதற்கு சரவணன் எல்லாமே ஓகே தான் ஆனால் நீயும் வேலைக்கு போய்விட்டால் எனக்கு கௌரவமாக இருக்கும் என்று சொல்கிறார். இதனால் இந்த பிரச்சினை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தங்கமயில் புலம்பித் தவிக்கிறார்.

- Advertisement -

Trending News