Tamil Cinema News | சினிமா செய்திகள்
96 பட தெலுங்கு ரீ மேக்கில் நடிக்கிறாரா சமந்தா? அவரே சொன்ன பதில்.

’96
1996 ஆம் வருடம் தஞ்சையில் ஸ்கூலிங் முடித்த ஒரே பாட்ச்சை சேர்ந்தவர்கள் 2016 இல் சென்னையில் கெட்- டுகெதர் வைப்பது தான் கதைக்களம். 22 வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் இருவருக்குள் நடக்கும் அன்பு பரிமாற்றம், பாசம், மீண்டும் துளிர்க்கும் காதல், அக்கறை என எமோஷன்களின் உச்சத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்திருந்தனர். தமிழகத்தில் ராம் மற்றும் ஜானு இன்று செல்லப்பெயர் ஆகிவிட்டது.
இந்நிலையில் ட்விட்டரில் த்ரிஷாவின் நடிப்பை பாராட்டினார் சமந்தா. ’96 படம் பார்த்தேன். ஓ மை கடவுளே, என்ன ஓர் நடிப்பாற்றல். நீங்கள் அசத்தலாக நடித்திருப்பதை எங்கு துவங்கி விவரிப்பது எனத் தெரியவில்லை. நடிப்பில் உச்சம் அது. ரொம்பவே வித்தியாசமான கதாபாத்திரம். கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டம், இதே போல் நிறைய படங்களில் நீங்க கலக்க வேண்டும்’.
இந்நிலையில் இப்படத்தினை தெலுங்கில் ரிமேக் செய்ய நானி ஆர்வமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் சமந்தா தான் என்றனர். இதே கேள்வியை ரசிகர் ஒருவர் கேட்க, அந்த படத்தை ரீமேக்கே செய்ய கூடாது என்று சமந்தா சொல்லியுள்ளார்.
