Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடுக்கடலில் போட்டோ ஷூட் நடத்திய சமந்தா.. உசுப்பேத்தும் புகைப்படத்தால் உருக்குலைந்த ரசிகர்கள்!
என்னதான் மாடலிங் மூலம் அறிமுகமானாலும், தன்னுடைய கடுமையான முயற்சியால் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா.
மேலும் நடிகை சமந்தா தெலுங்கு வாரிசு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆகி இருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்குப் பிறகு தங்களது கேரியரை ஸ்டாப் செய்யும் பல முன்னணி நடிகைகளுக்கு மத்தியில் சமந்தா ஒரு விதிவிலக்காய் விளங்கி வருகிறார். ஏனெனில் திருமணத்திற்குப் பிறகு கூட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறார் சமந்தா.
இந்த நிலையில் சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதீத கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ரசிகர்கள் பலரை உசுப்பேத்தி இருக்கிறார்.
அதாவது லாக் டவுனுக்கு பிறகு பல நடிகர், நடிகைகள் வெக்கேஷன்காக பல இடங்களுக்கு சென்று, அங்கிருந்து புகைப்படங்களை எடுத்து சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பல மாதங்களுக்குப் பிறகு வெக்கேஷன் மோடை ஆன் செய்திருக்கும் நடிகை சமந்தா, அவருடைய கணவரான நாக சைதன்யாவுடன் மால தீவிற்கு சென்று இருக்கிறாராம். மேலும் அங்கிருந்து புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் சமந்தா.
அதேபோல் தான், தற்போது சமந்தா பிகினி உடை போட்டு, கடலில் இருந்து படிக்கட்டுகளில் ஏறி வருவது போல் புகைப்படம் ஒன்றை எடுத்து, அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

Samantha
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் பலரை ஏங்க வைத்ததோடு, ‘பாத்து மேடம் கடலுக்கு ஜுரம் வந்துரபோது’ என்ற கமெண்டையும் பெற்று வருகிறது.

samantha
