Tamil Cinema News | சினிமா செய்திகள்
எப்படி இந்த போட்டோ லீக் ஆச்சு என்றே தெரியலையே – புலம்பும் சமந்தா!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகை சமந்தா. இவர் சில வருடங்களாக காதலித்த நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார். நடிகைகள் பலர் பட வாய்ப்பு இல்லை என்றால் தான் திருமணம் செய்து கொள்வார்கள், ஆனால் இவர் பட வாய்ப்பு அதிகமாக இருக்கும் பொழுதே திருமணம் செய்து கொண்டவர்.
மேலும் திருமணத்துக்கு பின்னும் முன்பு போலவே நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ரசிகர் ஒருவர் சமந்தாவின் போட்டோவை தனியாக போட்டோஷாப்பில் எடிட் செய்து திருமணம் செய்தது போல புகைப்படத்தை வெளியிட்டார். இதனை ரசிகர் பக்கத்தை சேர்ந்த ஒருவர் சமந்தாவையும் tag செய்து என்ன இது ? என்ற கேள்வியை கேட்டனர்.
@Samanthaprabhu2 ??
What Is This??? pic.twitter.com/KX4KQEoPrd— సరైనోడు™ (@allusumanth32) July 29, 2018

Samantha Photo Shop
சமந்தா ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பவர். அதற்கு பதிலும் தந்தார்.
Eloped last week .. don’t know how this leaked .. It was love at first sight https://t.co/wJxvLBXbCc
— Samantha Akkineni (@Samanthaprabhu2) July 29, 2018
அப்பட்டமாக போட்டோ எடிட் செய்யப்பட்டது என்று தெரிந்தும் இந்த கேள்வி கேட்கப்பட சமந்தாவும் குசும்பாய் பதில் தந்துள்ளார். “போன வாரம் ஓடிப்போனோம் திருமணம் செய்ய. எப்படி இந்த போட்டோ லீக் ஆனது என்று தெரியவில்லை. முதல் பார்வையிலே உருவான காதல்.”
சினிமாபேட்டை காமெண்ட்ஸ்
இது என்னடா நாக சைதன்யாவுக்கு வந்த சோதனை.
