டோலிவுட்டிலும் அடிக்க வேண்டும் கேரளா புயல்.. சமந்தா வைத்த கோரிக்கை

Samantha : கேரளா திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை ஹேமா கமிட்டி அறிக்கையாக தயார் செய்து உள்ளது. இதை தொடர்ந்து மலையாள சினிமாவில் பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் என பலர் தங்களுக்கு தொந்தரவு தந்ததாக நடிகைகள் புகார் அளித்து வருகின்றனர்.

இதனால் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் என மற்ற சினிமா பிரபலங்கள் இடமும் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஷால் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிலையில் தமிழ் சினிமாவிலும் ஹேமா கமிட்டி போல் அமைக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகியவற்றில் மிகவும் புகழ் பெற்ற நடிகையான சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி போட்டுள்ளார். அதாவது கேரளாவில் ஹேமா கமிட்டி போன்று தெலுங்கு சினிமாவிலும் ஒரு அமைப்பை கொண்டு வர வேண்டும்.

தெலுங்கு சினிமாவுக்கு சமந்தா வைத்த கோரிக்கை

samantha
samantha

கடந்த 2019 ஆம் ஆண்டு தி வாய்ஸ் ஆப் உமன் என்ற அமைப்பு தெலுங்கு சினிமாவில் உருவாக்கப்பட்டது. இதன் அறிக்கை வெளியிட்டால் தான் குற்றங்கள் வெளியே வந்து பல நடிகைகளும் தங்களுக்கு நடந்த அநீதிகளை வெளியே சொல்லுவார்கள்.

இதன் மூலம் தெலுங்கு சினிமாவில் ஒரு பாதுகாப்பான அம்சத்தை உருவாக்க முடியும் என்று சமந்தா கூறி இருக்கிறார். சமந்தாவின் இந்த பதிவால் தெலுங்கு சினிமாவிலும் நடிகைகளுக்கு ஆண்களால் டார்ச்சர் நடந்து வருவது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

பெண்களுக்கு பணியிடங்கள், பேருந்து என எங்கு சென்றாலும் இது போன்ற பிரச்சனையை சந்தித்தாலும் சினிமாவில் இவ்வளவு பூதாகரமாக இருப்பது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாகத்தான் இருக்கிறது. இந்த சரியான நேரத்தில் முறையாக களைக் கிள்ளி எறிந்தால் நல்ல சமுதாயத்தை உருவாக்கலாம்.

துணிச்சலான நடிகை சமந்தா

Next Story

- Advertisement -