வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

அம்புட்டும் தண்டம், ஒண்ணத்துக்கும் பிரயோஜனம் இல்ல.. 3 வருஷத்துக்கு பிறகு நாக சைதன்யா பற்றி மனம் திறந்த சமந்தா!

Samantha: சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானா ஆண்டி என்று சொல்வார்கள். அப்படி ஒரு வேலையைத்தான் இப்போது சமந்தா செய்திருக்கிறார். நாக சைதன்யாவுக்கு கல்யாண தேதி நெருங்க நெருங்க சமந்தா நிறைய உண்மைகளை பேசி விடுவார் போல.

சமந்தாவுடன் ஆன விவாகரத்துக்கு பிறகு நாக சைதன்யா தன்னுடைய சக நடிகை சோபிதாவை காதலித்து திருமணம் செய்ய இருக்கிறார். மூன்று வருட பிரிவுக்கிடையில் சமந்தாவை பற்றி பெரிய அளவில் எந்த நடிகர்களுடனும் கிசுகிசுக்கள் வரவில்லை.

சமந்தாவும் எந்த இடத்திலும் நாக சைதன்யா பற்றி பேசவே இல்லை. சினிமா மற்றும் மருத்துவ சிகிச்சை என தன்னுடைய நாட்களை நகர்த்தி வருகிறார். அது மட்டும் இல்லாமல் அவ்வப்போது ரசிகர்களுடனும் தன்னுடைய வாழ்க்கையை பற்றி பேசி வருகிறார்.

அம்புட்டும் தண்டம், ஒண்ணத்துக்கும் பிரயோஜனம் இல்ல

இந்த நிலையில் சமீபத்தில் சமந்தா நடிப்பில் சிட்டாடல் என்ற வெப் சீரிஸ் வெளியானது. இந்த பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக சமந்தா மற்றும் வருண் தவான் நிறைய சேனல்களில் பேட்டி கொடுத்து வருகிறார்கள். அப்படி ஒரு பேட்டியில் இருவரும் மாற்றி மாற்றி தங்களை கேள்வி கேட்டு பதில் சொல்வது போல் இருக்கிறது.

அதில் வருண் தவான் சமந்தாவிடம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்த தேவை இல்லாத செலவு என்று எதை சொல்வீர்கள் என்று கேட்கிறார். அதற்கு கொஞ்சம் யோசிக்காமல் சமந்தா என்னுடைய எக்ஸ்க்கு நான் தேவையில்லாமல் நிறைய செலவுகளை செய்திருக்கிறேன். நிறைய விலை உயர்ந்த பரிசுகளை வாங்கிக் கொடுத்திருக்கிறேன் என்று சொல்கிறார். சரியாக திருமண தேதி நெருங்கும் நேரத்தில் கொளுத்திப் போட்டு இருக்கிறார் சமந்தா.

- Advertisement -

Trending News