தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ‘தங்கமகன்’ படத்தில் தனுஷுடன் நடித்த சமந்தா, மீண்டும் அவருடன் ‘வடசென்னை’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

ஆனால் தற்போது சமந்தாவின் திருமண நிச்சயதார்த்தம் இன்னும் ஒருசில நாட்களில் நடைபெறும் என்றும் அதனையடுத்து திருமணம் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

எனவே ‘வடசென்னை’ படத்தில் இருந்து சமந்தா விலகப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த ஒரு படத்தை தவிர சமந்தா வேறு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாததால் முழுநேர குடும்பத்தலைவியாக மாற அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.