samantha.pngகோலிவுட்டில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி போடுவதுடன் டோலிவுட்டிலும் மகேஷ்பாபு, ஜூனியர் என்டிஆர் என முன்னணி  ஹீரோக்களுடன் நடித்து வருகிறார் சமந்தா. இவரை தனது ஜோடியாக்குவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்.

இவர் புதுமுக நடிகராக அறிமுகமாகவுள்ளார். இதற்காக சூர்யா நடிக்கும் ‘எஸ் 3’ படம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசை அமைக்க மறுத்து நடிப்பதற்கான பயிற்சிகள் மேற்கொண்டிருக்கிறார். புதுமுக நடிகர் என்றாலும் ஏற்கனவே பிரபலமானவர் என்பதால் சமந்தா கால்ஷீட் தருவார் என்று கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  அடக்கடவுளே! பூனம் பாண்டேவின் செயலில் ஆபாசத்தின் உச்சக்கட்டம்

டோலிவுட் இயக்குனர் சுகுமார் தமிழ், தெலுங்கில் தேவி ஸ்ரீபிரசாத் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். சமீபத்தில் பிரசாத்தின் தந்தை திடீர் மரணம் அடைந்தார். எதிர்பாராத இந்த சோகத்தால் அவரது நடிப்பு மற்றும் இசை பணிகளில் தொய்வு ஏற்பட்டிருந்தது.

அதிகம் படித்தவை:  டோவினோ தாமஸ் நடிப்பில் "மரோடனா" மலையாள பட ட்ரைலர் !

தற்போது அதிலிருந்து மீண்டு வேலையில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். வரும் மார்ச் மாதம் முதல் ஷூட்டிங்கில் பங்கேற்க இருப்பதால் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்த படங்களின் இசை பணியை முடித்துக்கொடுப்பதற்கான வேலையில் மும்முரம் காட்டி வருகிறார்.