Tamil Cinema News | சினிமா செய்திகள்
சின்னத்திரையில் நடிப்பதற்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் சமந்தா.. பணத்தாசை யாரை விட்டுச்சு!
சினிமா வாய்ப்புகள் இருந்தாலும் கூட சின்னத்திரையில் வரும் வாய்ப்புகளையும் சமந்தா விட்டுவைப்பதில்லையாம். தெலுங்கு பிக்பாஸில் சமந்தா சில நாட்களாக நடுவராக கலந்து கொண்டார்.
திருமணத்திற்குப் பின் கூட முன்னிலை நடிகையாக வலம் வரும் சமந்தாவிற்கு தற்போது அடுத்தப்படியாக OTT தளத்தில் தொகுப்பாளினியாக நிகழ்ச்சி ஒன்றை நடத்தி கொண்டிருக்கிறார்.
அதுவும் முதல் நிகழ்ச்சியை விஜய் தேவர்கொண்டாவை பேட்டி எடுத்து OTT தளத்தை அதிர வைத்துள்ளார் சமந்தா. சினிமாவை தாண்டி சின்னத்திரையிலும் பிரபலமாகி வரும் சமந்தாவை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் இவர் ஒரு எபிசோடுக்கு கிட்டத்தட்ட 1.5 லட்சம் சம்பளம் வாங்குகிறார்.
மொத்தம் 10 எபிசோடு என்று பார்த்தால் 1.5 கோடி சம்பளம் வாங்கி வருகிறார் சமந்தா. சினிமாவை தாண்டி சின்னத்திரையிலும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சமந்தாவை பார்த்து ஆச்சரியத்தில் உள்ளனர் சினிமா துறையினர்.
அதே சமயம் பட வாய்ப்புகளில் கவனம் இல்லாதது போல் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பணத்தாசை யாரை தான் விட்டு வைத்தது என்பது போன்ற ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

samantha-cinemapettai
