fbpx
Connect with us

Cinemapettai

’96’ தெலுங்கு ரீமேக்கான ‘ஜானு’ கேரக்டரில் நடித்து வரும் சமந்தா ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்

samantha-96

Tamil Cinema News | சினிமா செய்திகள்

’96’ தெலுங்கு ரீமேக்கான ‘ஜானு’ கேரக்டரில் நடித்து வரும் சமந்தா ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி, கெளரி கிஷண் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ’96’. 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் தற்போது வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. சர்வானந்த், சமந்தா, கெளரி கிஷண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். த்ரிஷா நடித்த ‘ஜானு’ என்ற கேரக்டரே படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் அண்மையில் வெளியிடப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

‘ஜானு’ டீஸர் தொடர்பாக சமந்தாவைக் குறிப்பிட்டு ரசிகர் ஒருவர், ” ‘ஜானு’ டீஸரின் சிறப்பம்சம் என்னவென்றால் ஒரிஜினல் போல் இல்லாமல், சமந்தா அவரது பாணியில் நடித்துள்ளார். அவர் ஒரு சிறப்பான நடிகை” என்று கூறியிருக்கிறார்.

ரசிகருக்குப் பதிலளிக்கும் விதமாக சமந்தா, “மிக்க நன்றி. த்ரிஷாவின் கச்சிதமான நடிப்பை அப்படியே பிரதி எடுக்காமல் இருப்பது முக்கியம் என்று நான் நினைத்தேன். அது திரையிலும் சரியாக இருக்காது.

அது மட்டுமின்றி ஒப்பிடுவதற்காக ஜானு எடுக்கப்படவில்லை. இன்னும் நிறைய மக்கள் அந்த அனுபவத்தை உணரவே வேண்டும் என்றே எடுக்கப்பட்டுள்ளது” என்றார். தெலுங்கில் இப்படம் வெளியாகும் போது சமந்தா பல ஆண்டுக்கு பேசப்படுவார் என நம்பலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top