ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் மும்முரமாக உள்ள நடிகைகளில் சமந்தாவும் ஒருவர்.

சமீபத்தில் தன் ரசிகர்களிடையே ஒரு வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார்.

கடந்த ஒருவருடத்தில் சமந்தா நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டானாலும் அவர் தற்போது ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கவே ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கான காரணத்தை வருத்தத்துடன் ட்விட்டரில் வெளியிட்டார் சமந்தா.

அதிகம் படித்தவை:  சமந்தாவின் திருமண தேதி உறுதியானது – தேதி இதோ

தென்னிந்தியப் படங்களில் ஒரு நடிகைக்கு அர்த்தமுள்ள கதாபாத்திரங்கள் கிடைப்பது எவ்வளவு கடினம் என்பதை உணர்கிறேன். நல்ல கதாபாத்திரம் கிடைக்காததால் தான் நான் நிறைய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. இது வருத்தத்தை அளிக்கிறது என்றார்.