Tamil Cinema News | சினிமா செய்திகள்
இது தப்புங்க.. நான் சமந்தா பக்கம்தான்.. அதிரடி ஆதரவளித்த பிரபல நடிகை
விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோர் ஜோடியாக நடித்து கடந்த 2017ம் ஆண்டு வெளியான பெரும் சூப்பர் ஹிட் திரைப்படம். இந்த படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்தார்கள். ஜானு என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் த்ரிஷா வேடத்தில் சமந்தா நடித்தார், விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் ஷர்வானந்த் நடித்தார். இயக்குனர் பிரேம்குமாரே தெலுங்கிலும் ரீமேக் செய்திருந்தார்,
ஜானு திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்களே வந்தது, ஆனால் வணிக ரீதியாக இந்த படத்தால் வெற்றிபெற முடியவில்லை, மேலும் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியான பின்னர், பல ஊடக இணையதளங்கள் ஜானு தோல்வியடைந்ததாக அறிவித்தன.
இந்நிலையில் ஷர்வானந்த் முக்கிய வேடத்தில் நடிக்கும் மகாசமுத்திரம் திரைப்படத்தில் சமந்தாவுக்கு பதிலாக அதிதி ராவ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதை முற்றிலும் மறுத்துள்ள அதிதி ராவ். இது தவறான தகவல் என்றார். அத்துடன் சமந்தாவுக்கு ஆதரவாக அதிதி ராவ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட் பதிவில், “இது உண்மையிலேயே முக்கியமானது என்று நான் உணர்கிறேன். ஒரு வெற்றி அல்லது தோல்வி ஒரு நடிகையின் நம்பகத்தன்மையை பறிக்க முடியாது.

aditi
தனிப்பட்டமுறையில் கேட்கிறேன், இது போன்ற தவறான செயல்களை ஊக்குவிக்க வேண்டாம். ஒரு இயக்குனர் / தயாரிப்பாளருக்கு அவர்களின் அறிவிப்புகளை அவர்கள் பொருத்தமாகக் கருதும் விதத்தில் வழங்குவதற்கு மரியாதை அளிக்க வேண்டும். நன்றி” என்றார்.
