Tamil Cinema News | சினிமா செய்திகள்
மூன்றாம் பிஸ்னஸ் ஆரம்பிக்க ரெடியான சமந்தா.. தலைவி நீங்க வேற லெவல்

சமந்தா கல்லூரியில் படிக்கும் சமயத்தில் மாடெல்லிங் துறையில் தடம் பதித்தவர், பின்னர் தன்னுடைய கடுமையான முயற்சியினால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் .
நடிகைகள் பட வாய்ப்பு இல்லை என்றால் தான் திருமணம் செய்துகொள்வார்கள். ஆனால் பட வாய்ப்பு அதிகமாக இருக்கும் பொழுதே காதலித்த நாக சைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார். ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார். திருமணத்துக்கு பின்னும் முன்பு போலவே நடித்து வருகிறார்.
நடிப்பது மட்டுமில்லாமல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதும், வெப் சீரிஸ் எனவும் கலக்கிவருகிறார். பணம் என்ற நோக்குடன் மட்டுமன்றி சமந்தா “பிரத்யுஷா” என்ற NGO ஆரம்பித்து குழந்தைகள் மற்றும் மகளிருக்கான மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறார்.
இதுமட்டுமன்றி “ஈகம்” என்ற பெயரில் ஹைதராபாத்- ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் ப்ரீ ஸ்கூல் (pre school) ஆரம்பித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் “சகி” என்ற பெயரில் பெண்களுக்கான டிசைனர் உடைகள் விற்பனை செய்து வருகிறார்.

ekam samantha
இந்நிலையில் விரைவில் சமந்தா பெண்களுக்கான நகை, அணிகலன்கள் தொடர்பாக புதிய பிசினஸ் ஆரம்பிக்க உள்ளாராம். இதற்கான முதல் கட்ட பணிகள் முடித்துவிட்டதாம். விரைவில் தனது அடுத்த பிசினஸில் கலக்க போகிறார் சமந்தா.
