Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனது முன்னாள் காதலர் குறித்து சமந்தா வெளியிட்ட ஷாக் தகவல்

நடிகை சமந்தா தனது வாழ்வின் மிக மோசமான தருணமாக தனது முன்னாள் காதலர் குறித்த தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் பிஸியான நடிகையாக இருப்பவர் சமந்தா. ஆரம்பத்தில் ராசி இல்லாதவர் என ஓரம்கட்டப்பட்டாலும் தொடர்ந்து கொடுத்த அவர் உழைப்பு இன்று அவரை பெரிய உயரத்தில் தான் வைத்து இருக்கிறார். நடிகை சமந்தா, தனது காதலர் நாக சைதன்யாவை கடந்த வருடம் இரு மத முறைப்படி திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் அவருக்கு வாய்ப்புகள் என்னவோ குறையாமல் தொடர்ந்து பிரபலமாக இருந்து வருகிறார். இவர்கள் காதல் திருமணத்திற்கு முன்னரை விட தற்போது தான் செம ரொமான்ஸாக சென்று கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், நடிகை சமந்தா தனது சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது முன்னாள் காதலர் குறித்த ஷாக் தகவலை வெளியிட்டு இருக்கிறார். நடிகையர் திலகம் படத்தில் நடிக்கும்போது எனக்கு என் சொந்த வாழ்க்கையில் இருப்பது போன்று அனுபவம் ஏற்பட்டது. நான் ஒரு நடிகரை கண்மூடித்தனமாக காதலித்தேன். எனக்கு அப்போது நல்ல நேரமோ என்னவோ அவரிடம் இருந்து பிரிந்து தப்பி விட்டேன். இல்லையென்றால் என் வாழ்க்கை இரண்டாவது சாவித்ரியாக மாறி இருக்கும். நான் செய்த புண்ணியம் தான் எனக்கு நாக சைத்தன்யா கிடைத்து இருப்பது எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
சமந்தா யாரை சொன்னார் என்று இந்த உலகிற்கு தெரியலாம். ஆனால், சமந்தாவும், நடிகர் சித்தார்த்தும் காதலித்து வந்தது பலருக்கு தெரியாமல் இருக்கலாம். இருவரும் சினிமாவிற்கு வந்த பிறகு, ஒன்றாக நடித்த ‘ஜபர்தஸ்த்’ படம் மாஸ் ஹிட் அடித்தது. அந்த சமயத்தில் தான் இவர்கள் காதலும் வெளிவந்தது. ஆனால், சமந்தாவின் பெற்றோர்கள் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். சித்தார்த் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர், சோஹா அலிகான், ப்ரியா ஆனந்த், ஸ்ருதி என ஏராளமாகக் கிசுகிசுக்கப்பட்டவர் என எதிர்ப்புக்கான காரணங்களை அடுக்கியிருக்கின்றனர். ஆனால், சமந்தா அப்போதெல்லாம் விடாப்பிடியாக தான் இருந்து இருக்கிறார். இப்படி சென்று கொண்டிருந்த காதல், திடீரென ப்ரேக் அப் ஆகியது குறிப்பிடத்தக்கது.
