புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

எனக்கு தாயாக வேண்டும்.. ஆனா, வெளிப்படையாக போட்டு உடைத்த சமந்தா

சமந்தா நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். நான்கு ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பின் நாக சைதன்யாவிடம் இருந்து விவாகரத்துப் பெற்றார். தற்போது, நாக சைதன்யா சோபிதாவை திருமணம் செய்ய தயாராகிவிட்டார். சமந்தா, சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

விவாகரத்திற்குப் பின் சமந்தாவிற்கு மையோசிடிஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிப்பில் இருந்து ஓராண்டு காலத்திற்கு ஓய்வை அறிவித்திருந்த சமந்தா, மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். தற்போது இவர் நடிப்பில் சிட்டாடல் வெப் தொடர் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

எனக்கும் தாயாக வேண்டும்

‘சிட்டாடல் ஹனி பன்னி’ என்ற பாலிவுட் வெப் தொடரிலும் நடித்துள்ளார். இது கடந்த 7-ம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. வருண் தவான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, சமந்தாவின் மகளாக காஷ்வி மஜ்முந்தர் நடித்திருந்தார்.

இவர் தான் பிற்காலத்தில் வளர்ந்து வருவார். அதன் தொடர்ச்சி கதை ஏற்கனவே, பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். இப்படி இருக்க, சமீபத்திய நேர்காணல் ஒன்றில், சமந்தா வெளிப்படையாக பேசியது, ரசிகர்களை ஈர்த்துள்ளது.

அதில், அவர், தாயாவது குறித்து பேசியிருந்தார். “தாயாக வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது. அது மிகவும் அழகான அனுபவம். நான் அதற்காக காத்திருக்கிறேன். மக்கள் என் வயதைப் பற்றி கவலைப்படுகிறார்கள், ஆனால் அதற்கு இன்னும் தாமதம் ஆகவில்லை. தாயாக முடியாத காலம் என்பது நமது வாழ்வில் இல்லை என்று நினைக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து, இவர் பிற்காலத்தில் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பாரா? அல்லது, 2வது திருமணம் செய்து கொண்டு பெற்றெடுப்பாரா என்ற கேள்வியை ரசிகர்கள் முன்வைக்க ஆரம்பித்துவிட்டனர்.

- Advertisement -

Trending News