Tamil Cinema News | சினிமா செய்திகள்
படுக்கையறை ரகசியத்தை பகிரங்கமாக வெளியிட்ட சமந்தா.. அதிர்ச்சியின் உச்சத்தில் கணவன் சைதன்யா!
‘சாய்சாம்’ என்ற செல்ல பெயரால் அறியப்படும் நட்சத்திர ஜோடி தான் நாகசைதன்யா- சமந்தா. இவர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் சாய்சாம் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பாலும், இருவருடைய கெமிஸ்ட்ரியாலும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான ஜோடியாக பேசப்பட்டு வருகின்றனர். அதேபோல் இருவரும் தங்களுக்கு இடையேயான காதலை எந்த ஒரு இடத்திலும் நிறைவு செய்யாமல் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமந்தா ஒரு பேட்டியில் அவர்களது படுக்கை ரகசியங்களை பகிர்ந்து இருப்பது ரசிகர்களை ஷாக்காகி உள்ளது.
அதாவது மஞ்சு லட்சுமி என்பவருக்கு சமந்தா அளித்துள்ள பேட்டியில், நாக சைதன்யாவின் ரகசியங்களைப் பற்றி உடைத்து பேசியுள்ளார் சமந்தா.
அந்த வகையில் லட்சுமி சமந்தாவிடம், ‘நீங்கள் திருமணத்திற்கு முன்பு லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது எனக்கு தெரியும். நீங்கள் தற்போது இருப்பதற்கும், அப்போது இருந்ததற்கும் உள்ள மூன்று வித்தியாசங்களை கூறுங்கள்’ என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு முதலில் இதை சொல்லத் தயங்கிய சமந்தா சிறிது நேரத்திற்குப் பிறகு, ‘சைதன்யாவின் முதல் மனைவி தலையணை தான். ஏனெனில் நான் அவருக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் கூட கண்டிப்பாகத் தலையணை எங்கள் இருவருக்கும் இடையே இருக்கும். உங்கள் கேள்விக்கு இது போதும் என்று நினைக்கிறேன்’ என்று பதிலளித்திருக்கிறார்.
இந்தத் தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
