fbpx
Connect with us

Cinemapettai

அதிரடியாக சம்பளத்தை குறைத்த சமந்தா!!!

அதிரடியாக சம்பளத்தை குறைத்த சமந்தா!!!

samanthaதமிழ்த் திரையுலகத்தில் இன்னும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் வரவில்லை என்றாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தெறி படமும், 24 படமும் அடுத்தடுத்து வந்த பிறகுதான் சமந்தாவின் தமிழ் மார்க்கெட் எப்படி இருக்கும் என்பது தெரிய வரும். அவரது நடிப்பில் இதற்கு முன் தமிழில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களான அஞ்சான், 10 எண்றதுக்குள்ள ஆகிய இரண்டு படங்களும் கொடுத்த தோல்வி சமந்தாவை நிறையவே யோசிக்க வைத்துவிட்டதாம்.

தமிழில் தனக்கு ராசி வொர்க் அவுட் ஆகுமோ ஆகாதோ என்ற எண்ணத்தில் தெலுங்கில் பல புதிய படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்து வருகிறாராம். அதோடு ராகுல் ப்ரீத்தி சிங்கால் ஏற்படும் போட்டியைச் சமாளிக்க தனது சம்பளத்தையும் அதிரடியாகக் குறைத்துவிட்டாராம். தற்போது தமிழில் இரண்டு முக்கிய படங்கள் வருவது போலவே, தெலுங்கிலும் பிரம்மோற்சவம், அ ஆ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வர உள்ளதாம். மேலும் சில புதிய படங்களுக்கான பேச்சு வார்த்தைகளையும் ஆரம்பித்துவிட்டாராம். அதிரடியாக சம்பளத்தையும் குறைக்க சம்மதித்துவிட்டதால், தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சமந்தாவையே தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்யவும் முன் வந்துள்ளார்களாம்.

தனுஷுடன் நடிக்க ஒப்பந்தமான வட சென்னை படத்தைத் தவிர தமிழில் வேறு படங்களில் நடிக்க அவர் முன் வரவில்லை என்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்பதும் தனுஷுக்கே தெரியும். 2017 வரை அக்கட தேசத்திலேயே சமர்த்தாக இருக்க சமந்தா பிரியப்படுகிறாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top