வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

அந்த மனசு இருக்கே சார்.. தனக்கு பதிலாக 2 முன்னணி நடிகைகளை Recommend செய்த சமந்தா

நடிகை சமந்தா பலரின் குட் புக்கில் இடம் பெற்றுள்ளார். ஆரம்பத்தில் நிற்க நேரமில்லாமல் நடித்துக்கொண்டிருந்த நடிகைக்கு கடந்த 3 வருடம் போராட்ட காலமாகவே உள்ளது. முதலில் விவாகரத்து, அதன் பின் மையோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சினிமாவிலிருந்து விலகி இருந்தார். அவர் கடைசி குஷி படத்தில் நடித்தார். அதன் பின் பிரேக் எடுத்து, மீண்டும் நடிக்க துவங்கி இருந்தார்.

அப்படி, அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சீட்டாடல் வெப் தொடர் கலவையான விமர்சனம் பெற்று வந்தாலும், அதில் சமந்தாவின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. மேலும் இந்த தொடருக்கான ப்ரோமோஷனும் ஒரு பக்கம் போய்க்கொண்டிருந்தது. அப்போது பல விஷயங்களை சமந்தா பகிர்ந்திருந்தார். சுற்றி இருக்கும் சிலரின் செயல்கள் எவ்வளவு தான் தன்னை பாதித்தாலும், அதை எதையும் வெளிப்படுத்தாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிறார் சமந்தா.

2 முன்னணி நடிகைகளுக்கு சிபாரிசு

தனக்கு உடல் நலம் சரி இல்லாதபோது கூட ஷூட்டிங் க்கு சரியான நேரத்திற்கு வந்து, நல்லபடியாக நடித்து கொடுத்துள்ளார் சமந்தா. சமீபத்தில் கூட வருண் தவான் அளித்த ஒரு பேட்டியில், சமந்தா பல நேரங்களில் மயங்கி விடுவார். அவர் அருகில் ஒரு oxygen tank எப்போதும் இருக்கும் என்றெல்லாம் கூறியது, ரசிகர்களுக்கு அவர் மீது ஒரு கனிவை ஏற்படுத்தியது

இந்த நிலையில், தனது உடல்நலம் சரி இல்லாத காரணத்தினால், முதலில் சமந்தா இந்த தொடரில் நடிக்கமாட்டேன் என்று கூறினாராம். அதுமட்டுமின்றி தனக்கு பதிலாக அதில் நடிக்க 2முன்னணி நடிகைகளை சிபாரிசு கூட செய்தார். நடிகை கீர்த்தி சனோன், அல்லது கியாரா அத்வானி நடித்தால் நன்றாக இருக்கும், அவர்களை தேர்வு செய்யுங்கள் என்று சமந்தா சிபாரிசு கூட செய்திருக்கிறார்.

பொதுவாக தனக்கு நிகரான நடிகைகளை எந்த நடிகையும் சிபாரிசு செய்யமாட்டார். அது அவர் பீக்கீல் இருக்கும் நேரமாக இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி.. அந்த தாராள மனசு யாருக்கும் வராது. ஆனால் சமந்தா அதை செய்திருப்பது, மேலும் நன்மதிப்பை அவர் மீது வர வைத்துள்ளது.

- Advertisement -

Trending News