Tamil Cinema News | சினிமா செய்திகள்
கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக – த்ரிஷாவை மனதார பாராட்டிய சமந்தா. ஏன் தெரியுமா ?
’96
96 ஆம் வருடம் தஞ்சையில் ஸ்கூலிங் முடித்த ஒரே பாட்ச்சை சேர்ந்தவர்கள் 2016 இல் சென்னையில் கெட்- டுகெதர் வைப்பது தான் கதைக்களம். 22 வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் இருவருக்குள் நடக்கும் அன்பு பரிமாற்றம், பாசம், மீண்டும் துளிர்க்கும் காதல், அக்கறை என எமோஷன்களின் உச்சத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்திருந்தனர்.

96
ராம் மற்றும் ஜானுவாக நடித்த சேது மற்றும் த்ரிஷாவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்படுகிறது. இந்நிலையில் நடிகை சமந்தா த்ரிஷாவிற்கு தன் பாராட்டையும் , வாழ்த்தையும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

96
’96 படம் பார்த்தேன். ஓ மை கடவுளே, என்ன ஓர் நடிப்பாற்றல். நீங்கள் அசத்தலாக நடித்திருப்பதை எங்கு துவங்கி விவரிப்பது எனத் தெரியவில்லை. நடிப்பில் உச்சம் அது. ரொம்பவே வித்தியாசமான கதாபாத்திரம். கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டம், இதே போல் நிறைய படங்களில் நீங்க கலக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
@trishtrashers watched #96TheFilm .. my god ❤️❤️❤️❤️ What a performance !! Can’t begin to tell you how amazing you were ?? masterclass in acting and such a difficult chatecter to play . God bless .. continue to just rock this show ?
— Samantha Akkineni (@Samanthaprabhu2) October 17, 2018
