Connect with us
Cinemapettai

Cinemapettai

சமந்தா செய்த சில்லரைத்தனமான செயல்.. ஊமக்குத்து குத்திவிட்ட பூஜா ஹெக்டே ரசிகர்கள்

samantha-pooja-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சமந்தா செய்த சில்லரைத்தனமான செயல்.. ஊமக்குத்து குத்திவிட்ட பூஜா ஹெக்டே ரசிகர்கள்

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதப் பொருளாக மாறி இருப்பது சமந்தா(samantha) மற்றும் பூஜா ஹெக்டே(pooja hegde) ஆகியோரின் சண்டை தான். இதில் சமந்தாவின் கேவலமான செயல் ஒன்று ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

இந்த சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய இருவரும்தான். இவர்கள் இருவருக்குமே தற்போது சரிசமமான அளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தாவின் புகைப்படத்தை பதிவிட்டு சமந்தா ஒன்றும் அழகு இல்லை என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. உடனடியாக பூஜா ஹெக்டே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை யாரோ ஹேக் செய்து விட்டார்கள் என கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து சமந்தா ரசிகர்கள் பூஜாவிடம் சமந்தாவிடம் மன்னிப்பு கேட்குமாறு #PoojaMustApologizeSamantha என்ற ஹேஸ்டேக்கை ட்விட்டரில் ட்ரென்ட் செய்தனர்.

ஆனால் அதன்பிறகு சமந்தா மற்றும் சின்மயி ஆகிய இருவரும் உரையாடிய கேவலமான ஸ்கிரீன் ஷாட் ஒன்று வெளியாகி பூஜா ஹெக்டே ரசிகர்களை கோபப்படுத்திய உள்ளது. அதில் சமந்தா சின்மயிடம், பூஜா பற்றி தரக்குறைவாக பேசி இருந்தது தெரியவந்தது.

இதனால் கடுப்பான பூஜா ஹெக்டே ரசிகர்கள், டுவிட்டரில் #WeSupportPoojaHegde என்ற ஹேஸ்டேக்கை ட்ரென்ட் செய்தனர். என்னதான் பெரிய நடிகையாக இருந்தாலும் தன்னுடைய சில்லறைத்தனமான செயலால் பெயரை கெடுத்துக் கொண்டுள்ளார் சமந்தா.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top