8-வது உலக தொழில் முனைவோர் மாநாடு தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 127 நாடுகளை சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட இளம் தொழில் முனைவோர்களும், 300 முதலீட்டாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாடு தொடங்குவதற்கு முன்பு, மோடிஇவான்கா சந்திப்பு நடந்தது.

 

இந்நிலையில் இவான்கா டிரம்ப்பிற்கு நினைவு பரிசாக சூரத்தின் பாரம்பரிய மிக்க கலைநயமிக்க மரப்பெட்கத்தை பிரதமர் மோடி வழங்கினார்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இவான்கா டிரம்புக்கு புகழ்பெற்ற ஐதராபாத் பிரியாணி வழங்கப்பட்டது.

 தெலங்கானா மாநில கைவினை பொருட்கள் விளம்பர தூதராக இருக்கிறார் சமந்தா. தனது மாநிலத்துக்கு வரும் டிரம்ப் மகளுக்கு பரிசளிக்க ஆலோசித்தவர் இறுதியாக கோல்லபம்மா சேலை பரிசளிக்க முடிவு செய்தார். கைத்தறியில்  நெய்யப்படுகிறது இந்த வகை சேலை. சமந்தா தானே நேரடியாக சென்று இவனிக்காவிற்கு வழங்கும் சேலைகளை தேர்வு செய்தாராம். அவரது தேர்வை அரசு அங்கீகரித்ததுடன்; பின்னர்  தனது பங்காகவும், பல்வேறு டிசைன் சேலைகளையும் சேர்த்து இவனிக்காவிற்கு வழங்கியுள்ளார்கள்.

நடிப்பு, இல்லற வாழ்க்கையில் சமந்தா கவனம் செலுத்தி வந்தபோதும் கைத்தறி ஆடைகளை விளம்பரப்படுத்தும் தூதராகவும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்தார்.